என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Charuhasan"
- 93 வயதாகும் சாருஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- சாருஹாசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் 1979-ல் வெளியான 'உதிரிப்பூக்கள்' படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். தமிழ் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'ஹரா' படம் வெளியானது.
இந்த நிலையில் 93 வயதாகும் சாருஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சாருஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சாருஹாசன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை அவரது மகளும் நடிகையுமான சுஹாசினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''தீபாவளிக்கு முந்தைய இரவு அப்பா சாருஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது நலமுடன் இருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன்.
80 வயதுடைய சாருஹாசன் நடிகராகவும் உள்ளார். இவர், கேரள மாநிலம் கொச்சியில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொண்டார். அங்கு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், அவர் கமல்ஹாசன் பற்றியும், கேரளாவின் முன்னணி நடிகர் பிரேம் நசீர் குறித்தும் தமிழக-கேரள மக்களின் சினிமா மோகம் பற்றியும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
கேரள மக்கள் கல்வியில் சிறந்தவர்கள். பள்ளிகளில் சென்று படித்தவர்கள். கல்வியில் சிறந்து விளங்கியதால் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த பிரேம் நசீர் கேரளாவின் முதல்-மந்திரியாக ஆக முடியவில்லை.
கேரள மக்களுக்கு இருந்த கல்வி அறிவே இதற்கு காரணமாகும். கேரள மக்கள் பள்ளிகளுக்கு சென்றபோதும், பெரும்பாலான தமிழர்கள் சினிமா என்னும் பள்ளிக்குதான் சென்றார்கள். அரசியல் கலாச்சாரத்தில் தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையேயான வித்தியாசத்திற்கு இதுவே காரணமாகும்.
நான், சினிமா உலகில் நுழைந்தபோது இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்கள் இருந்தன. இதில் 3 ஆயிரம் தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இருந்தது. மொத்த இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தென் மாநிலங்களில்தான் சினிமா தியேட்டர்கள் அதிகமாக இருந்தது.
கர்நாடகாவில் 1,400 தியேட்டர்களும், கேரளாவில் 1,200 தியேட்டர்களும் இருந்தன. கேரளாவில் 1,200 தியேட்டர்கள் இருந்தாலும் இங்கு அதற்கேற்ப பள்ளிக் கூடங்களும் இருந்தது.
கல்வி கற்பதன் மூலமே வேற்றுமைகளை களைய முடியும். இதுவே கேரளாவின் முன்னேற்றத்திற்கு காரணமாகும். தமிழ் நடிகர்களை காட்டிலும் மலையாளத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள்.
எனது சகோதரரும், நடிகருமான கமல்ஹாசன் ஒரு நாத்திகர். பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர். அவரது 16 வயதில் இருந்து பெரியாரின் ரசிகராக மாறியவர்.
கடவுள் மிகப்பெரியவர் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. அதே நேரம் என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த நான் விரும்புவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Charuhasan
ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசனின் பேட்டி ஒலிபரப்பாகிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட கருணாநிதி, கேரளாவை சேர்ந்த எம்.ஜி.ஆர்., கர்நாடகாவில் இருந்து வந்த ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியை பிடித்து சாதனை செய்துள்ளதால் புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலும், கடந்த கால நினைவுகள், அவரது வாரிசுகளில் அரசியலுக்கு வரப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் உள்பட பல்வேறு தகவல்களை தொகுப்பாளர் ராஜசேகருடன் அவர் பகிர்ந்துள்ளார். #Charuhasan #Rajinikanth #KamalHaasan #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்