என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chellandiyamman temple"
- திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
- விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருப்பூர் :
திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6மணிக்கு நடைபெற்றது. பூசாரிகள் மற்றும் அருளாளர்கள் குண்டம் இறங்கினர். அதன்பிறகு விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். காலை 10 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் விழா நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 5மணிக்கு மாவிளக்கு வழிபாடு, 6மணிக்கு பூம்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை 27-ந்தேதி சிறப்பு அபிஷேகம், கொடிஇறக்குதல், மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு அலங்காரம் (மகாலட்சுமி) நடக்கிறது.
28-ந்தேதி காலை 9மணிக்கு ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம்(பிரத்தியங்கிராதேவி ) நடக்கிறது. 29-ந்தேதி காலை 10மணிக்கு மறு பூஜை நடக்கிறது.