search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai City bus"

    • குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.
    • ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனாவிற்கு முன்பு வரை தினமும் 32 லட்சம் பயணிகள் தினமும் மாநகர பஸ்களில் பயணித்தனர்.

    கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு சரிந்தது. 10 லட்சமாக குறைந்த பயணிகள் எண்ணிக்கை பின்னர் படிப்படியாக உயரத் தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாக 25 லட்சம் வரை உயர்ந்தது. மாநகர பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேஜிக் வேன் போன்றவற்றில் கட்டணம் அதிகரித்தது.

    இதனால் அரசு பஸ்களை மக்கள் தற்போது நாடி வருகிறார்கள். குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் மாநகர பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. கொரோனா காலத்தில் பலர் பஸ் பயணத்தை தவிர்த்து மாற்று பயணத்திற்கு மாறினார்கள். இரு சக்கரம், கார் போன்ற வாகனங்களுக்கு மாறி விட்டனர்.

    இதனால் கொரோனாவுக்கு முந்தைய பயணிகள் அளவு வரவில்லை. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பஸ் பயணத்திற்கு மக்கள் மாறி வருகிறார்கள். இன்னும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. ஆனால் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அதனை நிறைவேற்ற முடியும் என்றனர்.

    சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. #ChennaiCitybus
    சென்னை:

    சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்துகளை, 673-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கி வருகிறது.

    9.88 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி, ஏறத்தாழ 37 லட்சம் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும்பங்காற்றி வருகிறது.

    சாதாரண பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்ற ஸ்டிக்கர் பேருந்துகளில் ஒட்டப்பட்டதன் பயனாக, பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போர் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகப்பட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த ஜூலை மாதத்தில் 3,575 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.5,67,900ம், ஆகஸ்ட் மாதத்தில் 4,082 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.6,74,650-ம் வசூலிக்கப்பட்டது.

    செப்டம்பர் மாதத்தில் 3,700 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.6,78,250-ம் ஆக மொத்தம் 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார். #ChennaiCitybus
    சென்னையில் மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, ஜி.பி.எஸ். கருவிகள் விரைவில் பொருத்தப்படுகிறது. #MTCBus
    சென்னை:

    சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 37 லட்சம் மாநகர, புறநகர் பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 810 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் தினமும் 6.25 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

    போக்குவரத்து கழகத்தின் சிக்கன நடவடிக்கையாக மாநகர், புறநகர் பஸ்களை கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்னை மாநகர் பஸ்களில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர பஸ்களில் விரைவில் தானியங்கி ஒலி பெருக்கி வசதி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பஸ் நிறுத்தங்கள் வரும்போது இந்த தானியங்கி ஒலி பெருக்கி தானாகவே அறிவிக்கும். ஜி.பி.எஸ். கருவி மூலம் இது செயல்படும் வகையில் அமைக்கப்படுகிறது. மின்சார ரெயில்களில் ஒவ்வொரு நிறுத்தங்கள் வரும்போது முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியாகும். அதுபோல மாநகர பஸ்களிலும் இந்த அறிவிப்புகள் வெளியாகும்.


    பயணிகள் இந்த அறிவிப்பின் மூலம் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தங்களை எளிதில் தெரிந்துகொள்ளலாம். எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

    இதேபோன்ற வசதிகளை மதுரை, கோவையில் மாநகர், புறநகர் போக்குவரத்து கழகங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ் பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். போக்குவரத்து கழக செயலாளர் டேவிதார் இதற்கான வசதிகளை மாநகர பஸ்களில் அமல்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். #MTCBus
    ×