search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai commissioner office"

    • கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக பிளேடால் வெட்டியதில் வாலிபருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் நுழைவு வாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை சென்று பிடித்தனர். அப்போது அவர் ஆவேசமாக கத்தினார். பின்னர் அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3-வது கேட் நுழைவு வாயில் அருகே இன்று காலை வாலிபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென தனது உடலில் பிளேடால் வெட்டி கூச்சல் போட்டார். கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக பிளேடால் வெட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் நுழைவு வாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை சென்று பிடித்தனர். அப்போது அவர் ஆவேசமாக கத்தினார். பின்னர் அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிளேடால் உடலை வெட்டிய வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவரது பெயர் ஹானஸ்ட் ராஜ் என்பது தெரியவந்தது.

    பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த இவரது சகோதரர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதும், அவரை பார்க்க சென்றபோது அனுமதிக்காத காரணத்தாலேயே ஹானஸ்ட்ராஜ் இது போன்று நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் முதியவரை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டிவி நடிகை மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் திலகவதி நகரில் வசித்து வருபவர் முத்தையா (72). கட்டுமான தொழில் செய்து வரும் இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அந்த மனுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.வி. நடிகை ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.

    கடந்த 29-ந்தேதி இரவு 11 மணியளவில் என் மகனுக்கு தெரிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், அவரது மனைவி டி.வி. நடிகை சஜினி மற்றும் ரவுடிகள் சிலர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர்.

    என்னையும் என் மகன் கிறிஸ்டோபரையும் காசிமேடு, அண்ணாநகர், ரவுடிகள் மூலம் கடத்தி சென்று கொலை செய்து விடுவதாக கூறி ரூ.10 லட்சம் உடனடியாக தரவேண்டும் என்று மிரட்டினர்.

    எதற்காக இந்த பணம் தர வேண்டும் என்று கேட்டதற்கு உன் மகன் உயிரோடு வேண்டும் என்றால் கேட்ட பணத்தை கொடு, இல்லையெனில் ரவுடிகளை வைத்து உன் குடும்பத்தை தீர்த்து கட்டிவிடுவேன் என்று மிரட்டினர்.

    பணத்தை இப்போது தரவில்லை என்றால் என்னையும் என் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதையடுத்து உயிருக்கு பயந்து ரூ.10 லட்சத்துக்கு ‘செக்’ எழுதி கொடுத்தேன். அதிகாலை 2 மணி வரை என்னை கத்தி முனையில் மிரட்டியதால் நான் வேறுவழி தெரியாமல் பயந்து செக்கினை கொடுத்து விட்டேன்.

    என்மகன் வீட்டிற்கு வந்த பிறகு நடந்த சம்பவத்தை கூறினேன். போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எந்த நோக்கத்திற்காக அவர்கள் எங்களிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

    அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், டி.வி. நடிகை சஜினி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். #StudentsDatabaseLeaked
    சென்னை:

    தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் விவரத் தொகுப்பு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்கும் விற்பனை செய்யப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை அனுப்பி வைப்பதற்காக, மாணவர்களிடமிருந்து செல்போன் எண்கள் பெறப்படுகின்றன. தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுவதால், அந்த நிறுவனங்கள் மூலமாக மாணவர்களின் விவரங்கள் விற்பனைக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை உயரதிகாரிகள் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் தனியார் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் சென்றது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #StudentsDatabaseLeaked

    ×