என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai Egmore"
- பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.
சென்னை எழும்பூர் அருகே சொகுசு கார் ஒன்று தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியுள்ளது. மேலும், கார், இரண்டு பைக்குகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.
மேலும், காரின் முகப்பில் உகாண்டாவுக்கான தூதரக அலுவலகம் என குறிப்பிடப்பட்ட போஸ்டர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காக பேருந்துகளும், ரெயில்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
- மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காக பேருந்துகளும், ரெயில்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் சாதாரண ரெயில் பெட்டிகள் தவிர அதிவேகத்தில் செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசான ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.
இதற்கு ‘தேஜஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. முதலாவது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை தலையிடமாக கொண்டு செயல்படும் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது.
இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு தேஜஸ் ரெயில் பயணத்துக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 2-வது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் ஐ.சி.எப். ஈடுபட்டது. இந்தப் பணி முடிந்ததைத் தொடர்ந்து நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2-வது ‘தேஜஸ்’ ரெயில் பெட்டிகள் டெல்லியை தலைமையிடமாக கொண்ட வடக்கு ரெயில்வேக்கு கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் தெற்கு ரெயில்வேயில் சென்னை-மதுரை இடையே கூடுதல் ரெயில்கள் தேவைப்படுவதாலும், இந்த வழித்தடம் இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாலும் தேவையை கருத்தில் கொண்டு தற்போது தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
சதாப்தி ரெயில் போன்று முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. 23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட் டும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன் எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.
இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும் கழிவறைகள் நவீன வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில் இயங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையான 497 கி.மீ. பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். இப்போது வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை செல்ல 8 மணி நேரமும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது.
தேஜஸ் ரெயில் காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மதுரை போய்ச்சேரும்.
தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இன்னும் கட்டணம் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது தேஜஸ் ரெயில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து புறப்பட்டு வில்லிவாக்கம் ‘யார்டு’ ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும் இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூடுதலாக சொகுசு ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே வரவேற்பை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #Tejastrain #Chennai #Madurai
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(வ.எண்.06001), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 5-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06002), நெல்லையில் இருந்து வருகிற 7-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
* சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில்(06011), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 1, 8-ந் தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06012), செங்கோட்டையில் இருந்து வருகிற 2, 9-ந் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
* தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரெயில்(06027), தாம்பரத்தில் இருந்து வருகிற 1, 3, 5, 8 மற்றும் 10-ந் தேதிகளில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்-தாம்பரம் வாரம் 3 முறை செல்லும் சிறப்பு கட்டண ரெயில்(06028) வருகிற 2, 4, 6, 9 மற்றும் 11-ந் தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில்(06007), சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 2, 9-ந் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவில்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண ரெயில்(06008), வருகிற 3, 10-ந் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும்.
* சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரெயில்(06005), சென்டிரலில் இருந்து வருகிற 5-ந் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண ரெயில்(06006), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
* சென்னை சென்டிரல்-ஆமதாபாத் சிறப்பு கட்டண ரெயில்(06051), சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 6-ந் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 8-ந் தேதி அதிகாலை 5.45 மணிக்கு ஆமதாபாத் செல்லும்.
* புதுச்சேரி-சந்திரகாச்சி சிறப்பு கட்டண ரெயில்(06010), புதுச்சேரியில் இருந்து வருகிற 6-ந் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு 8-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.
மேற்கண்ட ரெயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SpecialTrain
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1844-ம் ஆண்டு கூவம் நதிக்கரை ஓரம் செயல்பட்ட இந்த மருத்துவமனை 1882-ம் ஆண்டு எழும்பூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பல்வேறு பாரம்பரியங்களை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை 175-ம் ஆண்டில் இன்று(புதன்கிழமை) காலடி எடுத்து வைக்கிறது. இதனை சிறப்பு விழாவாக தமிழக அரசின் சுகாதாரத்துறை கொண்டாடுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் “எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து, தற்போது அதிக வயதுடைய ஒரு நபருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. அந்த அதிர்ஷ்டசாலி யார்? அந்த சிறப்பு பரிசு என்ன? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
எழும்பூர் மருத்துவமனை 1844-ம் தொடங்கப்பட்ட போது ஒரு மாதத்துக்கு 9 பிரசவங்கள் மட்டுமே நடைபெற்றது. தற்போது சராசரியாக 14 ஆயிரத்துக்கு மேலான பிரசவங்கள் ஒரு வருடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனையின் தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்களே கண்காணிப்பாளர்களாக இருந்தனர். 1942-ம் ஆண்டு, முதல் இந்திய கண்காணிப்பாளராக டாக்டர் ஆற்காடு லட்சுமணசுவாமி முதலியார் பதவியேற்றார்.
எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 1936-ம் ஆண்டு அகில இந்திய மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு காங்கிரஸ் நடைபெற்றது. இந்த மருத்துவமனையில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவ உபகரணங்கள் கொண்ட அருங்காட்சியகம் உள்ளது.
100 ஆண்டுகளுக்கு முன்னர் மகப்பேறு குறித்த படிப்புகளும், இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 1973-ம் ஆண்டு கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மருத்துவமனையில் 2007-ம் ஆண்டு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு மையம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Chennai #Egmore #GovernmentMaternityHospital #175years
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில்(வ.எண்.06011) எழும்பூரில் இருந்து அடுத்த மாதம்(ஜூலை) 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06012), செங்கோட்டையில் இருந்து அடுத்த மாதம் 3-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 28-ந் தேதி(இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் பேசுகையில், “எங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாக முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்