search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai fire accident"

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அசோக் நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    போரூர்:

    சென்னை அசோக் நகர், ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள காசி தியேட்டர் அருகே பிரபல நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 7மணி அளவில் வழக்கம் போல ஊழியர்கள் வந்தபோது அங்குள்ள அறை முழுவதும் புகைமூட்டமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் விற்பனைக்கு இருந்த மோட்டார்சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்தன. உடனே ஊழியர்கள் அங்கிருந்து அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் அசோக் நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த 11 புதிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் தீயில் கருகி நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கிய 5 பெண்கள் மீட்கப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு தங்கி இருந்த பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 5 பேர் பயந்து போய் கழிவறையில் பதுங்கினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் விடுதி உரிமையாளர் மகேஷ் விரைந்து சென்று அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தீயணைப்பு வீரர்களும், அங்கு விரைந்து சென்றனர். விருகம்பாக்கம் நிலைய அதிகாரி ஆரிபா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்துக்கு பிறகு ரஞ்சிதா, வித்யா, கவிதா, பவித்ரா, அய்னா, ஆகிய 5 பெண்களை மீட்டனர்.

    காயம் அடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் 12 பேர் கடுமையான போராட்டத்துக்கு பிறகே 5 பெண்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களின் துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அதிகாரி ஆரிபா உள்ளிட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
    ×