என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai robbry"
சென்னை:
சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 11-ந்தேதியில் இருந்து சென்னை மாநகர போலீசார் 2 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரையில், ஒரு ஷிப்டாகவும், 4 மணியில் இருந்து காலை 8 மணி வரையில் இன்னொரு ஷிப்டாகவும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் தினமும் பழைய குற்றவாளிகள், வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் சூளை மேட்டில் கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேர் நேற்று நள்ளிரவில் போலீசார் நடத்திய ‘ஷாமிங் ஆபரேஷன்’ சோதனையில் சிக்கினர். கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை ஆணையர் அன்பு, துணை கமிஷனர் செல்வநாக ரத்தினம் ஆகியோரது மேற் பார்வையில், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்து வேல்பாண்டி, சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரிஜிஸ்பாபு ஆகியோர் சூளைமேடு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வியாசர்பாடியை சேர்ந்த நியமத் துல்லா (23), புளியந் தோப்பை சேர்ந்த ஒருவிரல் கார்த்திக் (21) ஆகிய 2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்னையில் 3 நாட்களில் 15 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. வேப்பேரி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், அரும்பாக்கம், கோயம்பேடு, சூளைமேடு, திருவான்மியூர், அசோக்நகர், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 2 பேரும் கைவரிசை காட்டி உள்ளனர்.
இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரையில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்து நடந்து செல்பவர்களை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். எழும்பூர், கோர்ட்டூர்புரம், வேப்பேரி ஆகிய இடங்களில் செல்போனை பறித்து 3 பேரை கத்தியாலும் குத்தியுள்ளனர்.
கைதான நியமத்துல்லா, கார்த்திக் ஆகியோரிடமிருந்து 3 கத்தி, 19 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டள்ளது. கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட் டன.