search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் புகை வெளி வந்துள்ளது.
    • அந்த அறையை உடைத்து திறந்த தந்தை அதிர்ச்சி அடைந்தார்.

    சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் உறங்கிக் கொண்டிந்தார். அங்கிருந்த ஏ.சி.இயங்கியதால் அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

    இரவு நேரத்தில் அறையில் இருந்து புகை வெளிவந்ததை கண்ட தந்தை பிரபாகர், அதை உடைத்து பார்த்தபோது தீக் காயங்களுடன் மகன் ஷியாம் அலறியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக தண்ணீரை ஊற்றி காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதற்குள் ஷியாம் படுக்கையில் கருகி நிலையில் உயிரிழந்துள்ளார்.

    அந்த அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி.வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஏ.சி.வெடிப்புக்கு மின்கசிவு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று உள்ளூர் விடுமுறை.
    • சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 27.08.2022 அன்று பணி நாள்.

    44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

    மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு 28.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேற்காணும் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022 அன்று (நான்காவது சனிக்கிழமை) சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
    • செஸ் ஒலிம்பியாட் அரங்கில் இன்று பயிற்சி போட்டி நடைபெறுகிறது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    மடகாஸ்கர் தீவை சேர்ந்த வீரர்கள் நேற்று சென்னை விமானநிலையம் வந்தனர். அந்த அணியில் ஆன்ட்ரியனியனா, ஹெரிடியனோ, டொவினா, சார்லி மகானிகஜா ராஜெரிசன், ராகோடாமகரோ, ராமலன்சனோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து ஹங்கேரி, ஜாம்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்களை வரவேற்ற அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் ஓட்டலுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று தங்க வைத்தனர்.

    உஸ்பெகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஹாங்காங், வேல்ஸ், உருகுவே, ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா, வியட்நாம் உள்ளிட்ட நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இன்று சென்னை வருகிறார்கள். இதேபோல் போட்டியை நடத்தும் முதன்மை நடுவர் உள்பட 90 பேர் சென்னை வந்துள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் இன்று பயிற்சி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 1,414 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பாபநாசம் கீழ கஞ்சிமேடு மெயின் ரோட்டில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது 30) மனைவி கவிதா (22) சேர்க்கப்பட்டார்.

    இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கவிதாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கவிதா இறந்த போய்விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த கவிதாவி னன் உறவினர்கள் மருத்து வமனை முன்பு திரண்டனர். கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாபநாசம் துணை சூப்பிரண்ட் பூரணி, பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் - இன்ஸ்பெக்டர் இளமாறன், மண்டல துணை தாசல்தார் பிரியா, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதா இறப்பு குறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொ ண்டனர்.

    உறவினர்கள் திரண்டு வந்து கவிதாவின்உடலை வாங்க மறுத்து மருத்துவம னையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இறந்த கவிதாவை பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
    • இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை புளியந்தோப்பை சேர்ந்த மணிரத்தினம், பரமகுரு உள்பட 15 பேர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.

    வேளாங்கண்ணியை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு அக்கரைப்பேட்டை வழியே நாகை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினர். அப்போது டிக்கெட்டை கண்டக்டர் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

    டிக்கெட்டை ஏன் தூக்கி வீசுகிறீர்கள் என மணிரத்தினம், பரமகுரு மற்றும் அவருடன் வந்தவர்கள் தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிரத்தினம் தரப்பினர் கண்டக்டரை தாக்கியதாக தெரிகிறது.

    இதை பார்த்த பஸ்சில் இருந்த 3 மர்ம நபர்கள் திடீரென மணிரத்தினம், பரமகுருவை கத்தியால் குத்தினர்.

    இதனால் ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து மற்ற பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் நீங்கள் பயன்படுத்திய காரை நீங்கள் நிர்ணயித்த விலையிலேயே விற்பனை செய்ய இங்கே வாங்க.



    நீங்கள்  மிகவும் விரும்பும், முழுமையாக பயன்படுத்திய உங்கள் காரை விற்கும் முடிவு உங்களுக்கு மிகவும் வலியைத் தரும். விற்கும் செயல்முறையை எளிதாக்க, கார்ஸ்24 பைபைடிரைவ் திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்துகிறது. கார் முதலாளி தனது நீண்ட நாள் துணையாக இருந்த காரை எடுத்துக்கொண்டு  இறுதியாக ஒரு பயணம் செய்து மகிழ்வான பிரியாவிடையை வழங்குவதைப் பற்றி அது பேசுகிறது.  

     

    பைபைடிரைவ்’ என்பது காரின் நினைவுகளை சுற்றி அமையும்  கருத்து . உங்கள் காரை விற்கும் வலியை நீக்கும் பிராண்டாக கார்ஸ்24ஐ அது வெளிப்படுத்துகிறது. கார் முதலாளிகளுக்கு எப்போதும் தங்கள் காருடன் ஒரு இணைப்பு இருக்கும். நீங்கள் ஒரு காரை வாங்கும்போது, வாங்குவதற்கு நேரத்தை செலவழித்து அதனுடன் சிறப்பான பிணைப்பை உருவாக்குகிறீர்கள், அதனுடன்  அதிக நினைவுகளை பகிர்ந்து கொள்கிறீர்கள். அதே காரை விற்கும் நேரம் வரும்போது, நீங்கள் மிகவும் குழப்பமாக ஆகிவிடுவீர்கள் அது மிகவும் கஷ்டமாக இருக்கும்.  ஆனால் கார்ஸ்24ல் இம்மாதிரி பிரச்சினைகள் எதுவும் கிடையாது, நீங்கள் அங்கு காரை விற்க செல்லும்போது , நீங்கள் உங்கள் காரை தினமும் ஓட்டிக்கொண்டிருப்பதாக உணருவீர்கள். ஏனெனில் நாங்கள் அதனை உங்களுக்காக எளிமையாக்கி விடுவோம்.

    வழக்கமாக கார் முதலாளிகள் தங்கள் கார்களைவிற்க வரும்போது,  பெரும்லானா வாங்குபவர்கள்  ‘காரில்அதுசரியில்லை, இதுசரியில்லை, இது முறையாக இல்லை’ என பல புகார்களை தெரிவிப்பர்., கார் விற்பனையாளரின் மனதை நோகடிப்பது மட்டுமின்றி, காரின் விலையையும் குறைக்க முயல்வர். அது விற்பவரின் மனதை நோகடிக்கும். கார் விற்றாலுமே கூட ஆர்சி பரிமாற்றத்திற்கு பல மாதங்களாகலாம். அதனால் வாடிக்கையாளர்  தனது கார் விற்பனை முடிவிலிருந்து பின்வாங்கவோ அல்லது  கிடைக்கும் விலையில், கவலையுடன் காரைவிட்டுச்செல்லும் முடிவையோ எடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவின் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில் நுட்ப வல்லமை பெற்ற, பயன்படுத்திய கார் சந்தையிடமான  CARS24 , இந்தியாவில் மக்கள் கார்களை விற்கும் முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பணம் பரிவர்த்தனையிலிருந்து  அனுபவத்தின் நோக்கு வரை அனைத்தையும் அது மாற்றுகிறது . 

    சென்னை கார் விற்பனையாளர்களின் கவலைகளை அகற்ற, கார்ஸ்24ன்  https://bit.ly/2QyToZj  பைபைடிரைவ் திட்டம் அவர்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்கிறது என்பதைக்காட்டுகிறது. வாடிக்கையாளர்கள் ஒரே வருகையில் இரண்டு மணிநேரத்திற்குள்ளாக அருகிலுள்ள கார்ஸ்24கிளைக்கு ஓட்டிக்கொண்டு வந்து தங்கள் காரை விற்கலாம். அவர்கள் தங்கள் காருக்கான சிறந்த விலையை பெறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் அக்கவுண்டிற்கு உடனடியாக பணம் செலுத்தப்பட்டுவிடும். இது மட்டுமல்ல, ஆர்சி  பரிமாற்றமும் எந்த செலவும் இல்லாமல் இலவசமாகவே செய்து தரப்படுகிறது. இது கார் விற்பனையாளர்களின் பணத்தை சேமிப்பது மட்டுமின்றி பெயர் மாற்ற செயல்முறைக்காக அலைந்து திரியும் நேரத்தையும் சேர்த்து மிச்சப்படுத்துகிறது. இந்த அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் காரை வசதியாகவும் மகிழ்வாகவும் விற்பதற்கு உதவுகிறது.

    இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்க, மிகப்பிரபலமான டிவி நட்சத்திரமான திவ்யதர்ஷினி  பைபைடிரைவ் விளம்பர வீடியோவில் நடித்துள்ளார் அது சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் திவ்யதர்ஷினி அவரது காரை பைபைடிரைவ்-காக எடுத்துச்செல்கிறார். முழு வீடியோவும் உங்கள் காரை கார்ஸ்24ல் விற்பது எவ்வளவு மகிழ்வாகவும் எளிமையாகவும் இருக்கும் என்பதை காட்டுகிறது. அந்த புதிய வீடியோவை நாங்கள் இங்கே காணலாம்:



    இந்தியாவில் பயன்படுத்திய பழையகார்களை அதன் உண்மை விலையில் வாங்கிக் கொள்ளும் பணியை CARS24 நிறுவனம் 2015 ஆம் ஆண்டுதுவங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை  மிகச்சிறந்த விலையில் விற்பனை செய்ய நம்பகமான மற்றும் எளிமையான அணுகுமுறையை CARS24 தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

    CARS24 இன்று இந்தியாமுழுக்க 33 நகரங்களில் 152 கிளைகளில் CARS24 இயங்குமளவுமாபெரும்வளர்ச்சிபெற்றுஇருக்கிறது. பயன்படுத்திய கார்களை விற்பனை செய்வதில் இருக்கும் சிக்கல்களை தீர்த்து வாடிக்கையாளர்களை மிகக்குறைந்த காலக்கட்டத்தில் தங்களின் பழைய காரை CARS24 இடம் விற்பனை செய்திட முடியும். இத்துடன் விற்பனை செய்ததும் காருக்கான தொகையையும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னையில் CARS24 நிறுவனம்அண்ணாநகர், பெசன்ட்நகர், ஜி.எஸ்.டி. ரோட், முகப்பேர்மேற்கு, பெருங்குடி, ஓ.எம்.ஆர்., போரூர், திநகர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது.

    உங்கள் காரை விற்க கார்ஸ்24ல் தொடர்பு கொள்ளலாம்:
    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    இரவு 7 மணிக்கு நடக்கும் பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

    அவருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
    தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை  நடத்தினார். 

    இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

    கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை  போக்குவதற்கான வழி முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க சட்டசபை செயலகத்திடம் அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 9 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பத்விப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும்.

    இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.

    தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.

    ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.

    கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக கூறிய நித்ன் கட்கரிக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
    20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.



    இந்நிலையில், தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து தற்போது சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக, அண்ணா அறிவாலயம் சென்ற 13 எம்.எல்.ஏ.க்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  
    ×