search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chief justice Ranjan Gogoi"

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக இன்று கடிதம் கொடுத்துள்ளார். #RanjanGogoi #SupremeCourt #Ramana
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவருக்கும் அவர் பிரமாணப் பத்திரம் அனுப்பி இருந்தார்.

    தன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை அடைந்தார். இதை அவர் முற்றிலும் மறுத்தார்.

    தலைமை நீதிபதி மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 3 நீதிபதிகள் குழு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு நாளை இது பற்றி விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவில் இருந்து நீதிபதி ரமணா இன்று விலகியுள்ளார்.  அவர் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எனது நெருங்கிய நண்பர். அவர் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர். அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன் என ரமணா குறிப்பிட்டுள்ளார். #RanjanGogoi #SupremeCourt #Ramana
    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. #RanjanGogoi #SupremeCourt #AKPatnaik
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
     
    ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன என தெரிவித்தார்.

    இதற்கிடையே பாலியல் வழக்கில் தலைமை நீதிபதியை சிக்கவைக்க சதி நடப்பதாக வக்கீல் உத்சவ் பெய்ன்ஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக வாதிட ரூ.1½ கோடி வரை தருவதாக சிலர் முயன்றுள்ளனர் என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும்  என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.

    மேலும், ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் சதி உள்ளதா என்பது குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழுவுக்கு  சி.பி.ஐ., உளவுத்துறை, டெல்லி போலீசார் ஆகியோர்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #RanjanGogoi #SupremeCourt #AKPatnaik
    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #CJI #JusticeRanjanGogoi #46thChiefJusticeOfIndia
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.

    அதன்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை ஏற்று ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.


    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு  பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆவார். இவர் அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. #CJI #JusticeRanjanGogoi #46thChiefJusticeOfIndia
    ×