என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chikkudu Vamshi Krishna"
- வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் 10 கிலோ எடையுள்ள கட்டி இருப்பது தெரிய வந்தது.
- சிக்குடு வம்சி கிருஷ்ணா தலைமையிலான டாக்டர் குழுவினர் அனிதாவின் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிக்குடு வம்சி கிருஷ்ணா. டாக்டரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவர் வயிற்றில் உள்ள கட்டியால் மன உளைச்சல் மற்றும் உடல் நல கோளாறால் அவதி அடைந்து வருவதை அறிந்தார்.
இதையடுத்து நாகர்கர்னூல் மாவட்டம் பலமூரில் பாதிக்கப்பட்ட பெண் அனிதாவை அச்சம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு ஆண்டாக கட்டியுடன் அவதிப்படுவதாக டாக்டரிடம் தெரிவித்தார்.
அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் 10 கிலோ எடையுள்ள கட்டி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிக்குடு வம்சி கிருஷ்ணா தலைமையிலான டாக்டர் குழுவினர் அனிதாவின் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர்.
அனிதாவின் உயிரை காப்பாற்றியதற்கு அவரது குடும்பத்தினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், டாக்டருமான சிக்குடு வம்சி கிருஷ்ணாவிற்கு நன்றி தெரிவித்தனர்.