search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chikungunya virus infection"

    உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்கள் ஷாய்லி தோமர், பிரவீந்திர குமார் புளியங்கொட்டையின் மூலம் சிக்குன் குனியா நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து இருக்கின்றனர். #IITProfessors #Chikungunya
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் ‌ஷாய்லி தோமர், பிரவீந்திர குமார் ஆகியோர் புளியங்கொட்டையின் மூலம் சிக்குன் குனியா நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் காப்புரிமை கோரியும் பதிவு செய்து உள்ளனர்.

    ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஷாய்லி தோமர், பிரவீந்திர குமார் இருவரும் கூறியதாவது:-



    புளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. இது ஒரு சிறந்த ஆயுர்வேத உணவும் ஆகும். புளிய மரத்தின் பழம், கொட்டைகள், இலைகள் மற்றும் வேர்ப்பட்டை ஆகியவை அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, பாக்டீரியா தொற்று, ஒட்டுண்ணி தொற்று, மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் காயங்களை ஆற்றவும், வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது.

    புளியங்கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் லெக்டின் என்னும் ஒருவித புரதச்சத்து, நோய்க்கிருமிகள் உடலில் எளிதில் புகுந்து விடாத வகையில் உடலில் உள்ள உயிர் அணுக்களை பலப்படுத்துகிறது.

    இதன் மூலம் சிக்குன் குனியா நோயை பரப்பும் வைரஸ்கள் 64 சதவீதம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது மருந்து சந்தையில் இந்த நோயை குணப்படுத்துவதற்கான போதிய மருந்துகள் கிடைக்காத நிலையில் லெக்டினை பயன்படுத்தி சிக்குன் குனியாவிற்கு சிகிச்சை அளிப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #IITProfessors #Chikungunya
    ×