search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Friendly Courts"

    மேற்கு வங்காள மாநிலத்தில் சிறார்களின் வழக்குகளை விசார்ப்பதற்கு என புதிதாக 4 புதிய சிறார் நீதிமன்றங்கள் இன்று திறக்கப்பட்டன. #WestBengal #ChildFriendlyCourts
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் சிறார் நீதிமன்றங்களுக்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர், நீதிமன்றங்களை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் குழந்தைகள் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 30 ஆயிரம் குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், ஆனால், 90 ஆயிரம் குழந்தைகளுக்கு குற்றம் இழைக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளை விட குற்றம் இழைக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாக இருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், பீகார் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டி பேசினார். அதில், பல குழந்தைகளுக்கு தாங்கள் வன்புணர்வு செய்யப்படுகிறோம் என்பதே தெரியவில்லை என்றும், பலருக்கும் அதை தங்களது பெற்றோர்களிடம் கூட சொல்ல தெரியவில்லை எனவும் கூறினார்.

    இதுமாதிரியான குறைபாடுகளை இந்த சிறார் நீதிமன்றங்கள் நிவர்த்தி செய்யும் எனவும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்த சிறார் சிறப்பு நீதிமன்றங்கள், பங்க்‌ஷால் நீதிமன்றம், பர்ட்வான் மாவட்ட தலைமையகத்திலும், பங்குரா மாவட்ட தலைமையகத்திலும், காட்ரா பகுதியிலும் இன்று திறந்துவைக்கப்பட்டன. #WestBengal #ChildFriendlyCourts
    ×