என் மலர்
நீங்கள் தேடியது "Child"
- குழந்தை பிறந்து சுமார் 10 நாட்களே இருக்கும் என்று கூறப்பட்டது.
- குழந்தையை மீட்டுச் சென்று குழந்தைகள் நலக்குழு ஆலோசனைப்படி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
திருச்சி:
புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு இரவு சுமார் 8.30 மணியளவில் அரசு பேருந்து ஒன்று வந்தது. பேருந்து நிலையத்தை அடைந்ததும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர்.
இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பேருந்தை பிளாட்பாரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக சென்றனர். இதையடுத்து மீண்டும் பஸ்சை இயக்க அதில் ஏறியபோது பஸ்சுக்குள் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஆனால் பயணிகள் யாரும் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் சென்று பார்த்தபோது பஸ்சின் பின்புற இருக்கையில் ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுற்று முற்றும் பார்த்தும், விசாரித்தும் யாரும் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி வரவில்லை.
அந்த குழந்தை பிறந்து சுமார் 10 நாட்களே இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் குழந்தை கிடந்த இருக்கையின் அருகே ஒரு பையில் பால் பாட்டில், உடைகள் மற்றும் பேம்பர்ஸ் ஆகியவையும் இருந்தன.
எனவே புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிதான் யாரோ குழந்தையை விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பேருந்து ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டு பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக அவர்களும் குழந்தை பசியில் இருக்கும் என்பதை அறிந்து பாட்டிலில் இருந்த பாலை கொடுத்தனர்.
பின்னர் இதுபற்றி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆலோசகர் பிரியா ஆகியோர் வந்து குழந்தையை மீட்டுச் சென்று குழந்தைகள் நலக்குழு ஆலோசனைப்படி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
அங்கு சிசு வார்டில் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்க்குபேட்டரில் வைத்து சிகிச்சையும் அளிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த சின்னக் கரையை சேர்ந்த ஒருவரின் ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் /அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் குழந்தையின் மூச்சுக்குழாயில் குறுமிளகு சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டாக்டர்கள் குழுவினர் பிரான்ஸ்கோபி மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த குறுமிளகு அகற்றப்பட்டது. மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.
- திருச்சி கல்லகத்தில் குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை மீட்கபட்டது
- இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கல்லக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
டால்மியாபுரம்:
திருச்சி புள்ளம்பாடி ஊராட்சி கல்லகம் கிராமத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கல்லக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை என்று தெரிய வந்தது. குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையில் குப்பைத்தொட்டியில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையை பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் கோர்ட்டு கூறியது.
- குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறையாக தத்து எடுத்திருப்பதாகவும், எனவே அதனை தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
மும்பை:
மும்பையை சேர்ந்த 25 வயது இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்தார்.
காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பே பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுபற்றி காதலனிடம் கூற அவர் உடனடியாக திருமணம் செய்ய மறுத்தார்.
இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால் அதனை எப்படி வளர்ப்பது என தெரியாமல் திணறிய இளம்பெண்ணை சந்தித்த சிலர், அந்த குழந்தையை தத்து கொடுத்துவிடுமாறு கூறினர்.
அப்போது இருந்த மனநிலையில் அந்த பெண்ணும் அதற்கு ஒப்பு கொண்டார். அவரிடம் பேசிய இடைதரகர்கள், குழந்தையை தத்து எடுப்பவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்றும், அவர்கள் குழந்தையை நன்றாக வளர்ப்பார்கள் எனவும் கூறினர்.
இந்நிலையில் குழந்தையை தத்து கொடுத்த பெண், அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார். எனவே அவர், தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் வாங்க முயற்சி செய்தார்.
ஆனால் குழந்தையை தத்து எடுத்து அதனை வளர்த்து வரும் பெற்றோர் குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து குழந்தையின் தாய், மும்பை மாநகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜரான குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறையாக தத்து எடுத்திருப்பதாகவும், எனவே அதனை தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு தத்தெடுப்பு தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
அதன்படி வளர்ப்பு பெற்றோர் கோர்ட்டில் தத்தெடுப்பு ஆவணங்களை ஒப்படைத்தனர். அந்த ஆவணங்கள் கடந்த 2022-ம் ஆண்டே கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வளர்ப்பு பெற்றோர், குழந்தையை அதனை பெற்ற தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது. குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையை பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் கோர்ட்டு கூறியது.
- ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர்.
- குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது.
திருப்பதி:
வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகைகளால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் சுத்தமான காற்று கிடைப்பது அரிய பொருளாக மாறி வருகிறது. இதன் விளைவாக நுரையீரலில் அதிக மாசு ஏற்படுகிறது. இது முக்கியமாக குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் வளரும் நிலையில் அவர்களின் சுவாசம் மற்றும் நரம்பு மண்டலங்களை சேதப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. காற்று மாசுபாடு குறைந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் நுரையீரல் திறன் மேம்பட்டுள்ளது என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
காற்று மாசுபாடு அதிகமாக இருந்தால், குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது. ஆஸ்துமா ஆபத்து அதிகரிக்கிறது. குழந்தை பருவத்தில் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் மாசுபட்ட காற்றை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறக்கலாம். குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.
உலகளவில் ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர். குழந்தை பருவத்தில் அதிக அளவு காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு முதிர்ந்த வயதில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
2002-04-ம் ஆண்டை விட 2016-19 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நல்ல காற்றின் தரம் உள்ள பகுதிகளில் இளைஞர்களின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாசு பாதிப்பை சிறிதளவாவது குறைக்க முடிந்தாலும் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு குழந்தை பருவத்தில் இருந்து இளமைப் பருவம் வரை வளர்ச்சி காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
- கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர மருத்துவ உதவியாளர் மனோஜ் உடனடியாக பிரசவம் பார்த்தார்.
- தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா மருவூரை சேர்ந்தவர் தினகரன்.
இவரது மனைவி புவனாமேரி (வயது 22).
இவர் 3-வது பிரச வத்திற்காக தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவ மனைக்கு செல்ல 108 ஆம்புலன்சை அழைத்தனர்.
தகவலறிந்ததும் மருவூர் 108 ஆம்புலன்ஸ் தினகரன் வீட்டிற்கு விரைந்து சென்று புவனா மேரியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவ மனைக்கு வந்து கொண்டிருந்தது.
சிறிது தூரத்திலேயே புவனாமேரிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
உடன் துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் பாபு சாலையோரம் ஆம்புலன்ஸ்சை நிறுத்தினார்.
தொடர்ந்து கர்ப்பிணி பெண் புவனாமேரிக்கு அவசர மருத்துவ உதவியாளர் மனோஜ் உடனடியாக பிரசவம் பார்த்தார்.
இதில் புவனா மேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு அவரை அருகில் உள்ள திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாயையும், குழந்தையையும் அனுமதித்தனர்.
தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இதைக்கண்ட நோயாளியின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் பாபு மற்றும் மருத்துவ உதவியாளர் மனோஜ் ஆகியோரை பாராட்டினர்.
- நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது.
- சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் சண்முகாநகர் ராமசிங் வீதியில் அரசு கழிவறை கட்டிடம் உள்ளது.
இதன் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று ஏராளமான தெரு நாய்கள் உருண்டையான பொருள் ஒன்றை கடித்து குதறி தின்றன.
அப்போது நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு ஒன்றுக்கொன்று குரைத்தன.
இதனை அப்பகுதியில் மருந்து கடை வைத்துள்ள விக்கி என்பவர் பார்த்தார். நாய்கள் கடித்து கொண்டிருந்தது குழந்தையின் தலை போல இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் நாய்களை விரட்டி அடித்தனர்.
அப்போதுதான் நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் தலையை மீட்டனர்.
மேலும் அந்த பகுதியில் குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் உள்ளதா? என தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தலை அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
அந்த பகுதியில் குழந்தை ஏதாவது கொலை செய்து வீசப்பட்டதா? அல்லது சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
- விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவர் மற்றொருவரின் மனைவி சங்கீதா(24)வை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
பழங்குடி நாடோடிகளான குமரேசன் தம்பதி சமீபத்தில் புதுவையை அடுத்த கிருமாம்பாக்கம் புதுக்குப்பத்துக்கு வந்தனர். புதுக்குப்பம் குளக்கரையில் இவர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் இரவு குழந்தையோடு சங்கீதா அங்கு படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினர்.
அப்போது புதுக்குப்பம் சுடுகாடு அருகே கடற்கரையில் பெண் சிசு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு வந்த விசாரித்தபோது, அது சங்கீதாவின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை கண்டு சங்கீதா, குமரேசன் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த மர்ம ஆசாமிகள் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசில் தெரிவித்தனர்.
சங்கீதாவின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியே அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.
இதுகுறித்து சங்கீதா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
குழந்தை பிறந்த பிறகு என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு, அடித்து துன்புறுத்தினார். குழந்தை எனக்கு பிறந்ததா? எனக்கேட்டு தகராறு செய்தார். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததால் வளர்ப்பதற்கு சிரமப்பட்டேன். கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
நேற்று அதிகாலை எல்லோரும் அசந்து தூங்கும்நேரத்தில் குழந்தையை புதுக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுசென்றேன். அங்கு மணலில் குழந்தை தலையை அழுத்தி கொலை செய்து புதைத்துவிட்டு வந்துவிட்டேன். காலையில் ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிசுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- எதனால் குழந்தையை வீசி சென்றனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள முத்தாண்டிப்பட்டி ஆலடிஏரி பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் அருகே பிறந்த தொப்புள் கொடியுடன் பெண் சிசு காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக பூதலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் அங்கு சென்று காயங்களுடன் கிடந்த பெண் குழந்தையை மீட்டு உடனடியாக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிசுவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அன்பரசன் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.பூதலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் யார்? எதனால் குழந்தையை வீசி எறிந்து சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய்க்கு ‘அன்னை சுப்புலட்சுமி’ என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர்.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே 14-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில் சுப்புலெட்சுமியின் மகள் ஜெய்சங்கரி (வயது 32), மகன் ராகவேந்திரா (29) ஆகியோர் உயிரிழந்த தனது தாய்க்கு 'அன்னை சுப்புலட்சுமி' என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர். இதனையடுத்து நேற்று காலை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோம், சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
- நான் குழந்தையுடன் சென்று ஒரு மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றேன் என கண்ணீர் மல்க கூறினார்.
வேலூர்:
சேலம் ஆட்டையாம் பட்டியை சேர்ந்தவர்கள் சுந்தரி (வயது 63), சிவகுமார் (43). இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக காட்பாடிக்கு வந்தனர்.
சேலத்துக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ரெயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 மாத பெண் கைகுழந்தையை அவர்களிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.
பெண் திரும்பி வராததால் அவர்கள் ரெயில்வே போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அடையாளம் தெரியாத பெண் காட்பாடி பஸ் நிலையத்தில் இருந்து வேலுார் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ஆரணி செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்தது தெரியவந்தது.
கேமரா மூலம் கிடைத்த புகைப்படத்தை எடுத்து வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் மற்றும் உள்ளுர் போலீஸ் நிலையம் மூலம் விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தையை தவிக்க விட்டு சென்றது கண்ணமங்கலம் அருகே உள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரது மனைவி கலைச்செல்வி (வயது27) என்பது தெரியவந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் கலைச்செல்வியை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அப்போது குழந்தையை விட்டு சென்றதை ஒப்புக் கொண்டார்.
எனது கணவர் விஜய் திருப்பூரில் தறி வேலை செய்து வருகிறார். மாதம் ரூ.7 ஆயிரம் ஊதியம் கிடைக்கிறது. எங்களுக்கு ஏற்கனவே 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை வளர்க்க போதிய வருமானம் இல்லை. வறுமையின் காரணமாக தவித்தோம்.
ஏற்கனவே குடும்ப பெரியவர்கள் 4-வது குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கூறி இருந்தனர்.
என்ன செய்வது என வழி தெரியாமல் திணறினோம். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ளவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தோம். நான் குழந்தையுடன் சென்று ஒரு மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றேன் என கண்ணீர் மல்க கூறினார்.
போலீசார் அவருக்கு அறிவுரை கூறி குழந்தையை ஒப்படைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் காட்பாடி ரெயில் நிலையத்தில் மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்து சென்ற பெற்றோரை கண்டுபிடித்த தனிப்படையினரை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
- பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
- குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோழவரம்:
சென்னையை அடுத்த சோழவரம் அருகேயுள்ள பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நாய்களை விரட்டினார்கள். அப்போது குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை உள்ள பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. முகமும் அழுகி சிதைந்து காணப்பட்டது.
குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது. இதனால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த குழந்தையின் உடலில் தொப்புள் கொடி உள்ளது. எனவே பிறந்தவுடன் குழந்தையை தாய் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியை சுற்றியுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 10 நாட்களில் குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அதன் மூலம் குழந்தையின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் போலீ சார் ஈடுபட்டு வருகிறார்கள்.