search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chinnasalem dispute"

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் கண்டக்டரை தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சின்னசேலத்திற்கு நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 30-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சில் கண்டக்டராக ஆத்தூர் அருகே உள்ள பெரியேரிச் சேர்ந்த ரமேஷ் (வயது 28) என்பவர் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூட்டுரோடு என்ற இடத்தில் பஸ்வந்து நின்றது.

    அப்போது செல்வராஜ் (வயது 50) சின்னசேலம் வானக்கோட்டை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (32) சின்னசேலம் காந்திநகரை சேர்ந்த முருகன் (32) ஆகியோர் பஸ்சில் ஏறினர். அவர்கள் 3பேரும் பஸ்சின் படிகட்டில் நின்று பயணம் செய்துகொண்டு இருந்தனர்.

    அப்போது கண்டக்டர் ரமேஷ் ஏன்? படிக்கட்டில் நிற்கிறீர்கள் என்றார்.

    ஆனால் அவர்கள் அப்படிதான் நிற்போம் என்று கூறி கண்டக்டரிடம் தகராறு செய்தனர்.

    இரவு 10 மணியளவில் அந்த பஸ் சின்னசேலம் சென்றது. பஸ்சில் இருந்து செல்வராஜ், தேவேந்திரன், முருகன் ஆகியோர் கீழே இறங்கினர்.

    பின்பு அவர்கள் கண்டக்டர் ரமேஷிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்பு அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

    அதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த கற்களை எடுத்து பஸ் மீது வீசினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    இதையறிந்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே கண்டக்டர் ரமேஷ் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பஸ்நிலையத்திற்கு விரைந்து சென்று அங்கு தப்பி ஓடிய முருகன், தேவேந்திரன், செல்வராஜ் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    ×