search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinnathirai Nadigar Sangam"

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நடிகர், நடிகைகள் தங்களது வாங்குகளை பதிவு செய்து வருகிறார்கள். #ChinnathiraiNadigarSangam
    சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பது வழக்கம்.

    சங்கத்தின் தலைவராக இருந்த சிவன் சீனிவாசன் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மஹாலில் இன்று தேர்தல் தொடங்கியது.

    காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. மொத்தம் உள்ள 1551 ஓட்டுகளில் 12 மணி நிலவரப்படி 425 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    இந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகை நிரோஷா, சிவன் சீனிவாசன், ரவிவர்மா, போஸ் வெங்கட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



    நிரோஷா அணியில், பரத் செயலாளர் பதவிக்கும், எஸ்.ஸ்ரீதர் பொருளாளர் பதவிக்கும், வி.டி.தினகரன், கன்யா பாரதி ஆகியோர் துணைத்தலைவர் பதவிக்கும் விஜய் ஆனந்த், ரவீந்திரன், மோனிகா, முனிஷ் ராஜா ஆகியோர் இணை செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

    சிவன் ஸ்ரீநிவாசன் அணியில் செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண், துணைத்தலைவராக ராஜசேகர், மனோபாலா, பொருளாளராக ஸ்ரீவித்யா, இணைசெயலாளராக தளபதி தினேஷ், எம்.டி. மோகன். கற்பகவல்லி, சவால் ராம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    போஸ் வெங்கட் அணியில் செயலாளராக பி.கே. கமலேஷ், துணைத் தலைவர் பதவிக்கு சோனியா, எல்.ராஜா, பொருளாளராக நவீந்தர், இணை செயலாளராக க.தேவானந்த், தாடி பாலாஜி, ஸ்ரத்திகா, கே.கமலஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    14 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 4 அணிகள் சார்பில் 56 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    லியாகத் அலிகான், தம்பிதுரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்துகிறார்கள். #ChinnathiraiNadigarSangam

    ×