search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chital"

    • அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
    • வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் அரூர் காப்புக்காடு புளியன்தோப்பு சரகத்தில் கடந்த 10-ந் தேதி கன்னிவலை களை கொண்டு புள்ளிமானை வேட்டையாடி தலைமறைவான சோலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவன் (வயது 48), கொளகம்பட்டி அடுத்த எருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள் ஆகிய 2 பேரும் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அல்லி முத்து என்பவர் மூலம் பாப்பாரப்பட்டி பகுதியில் மான்கறி விற்பனை செய்த்தற்காக பாலக்கோடு வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அல்லி முத்து என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் மொரப்பூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவன் மற்றும் சேட்டு ஆகியோர் புள்ளிமானை வேட்டையாடி கறியினை விற்ற குற்றத்திற்காக விசாரணைக்கு அழைத்தபோது விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.

    இதைதொடர்ந்து அவர்களை பிடிக்க வனப் பாதுகாப்புப்படை மற்றும் வனச்சரக பணியாளர்கள் இணைந்து குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 25-ந் தேதி சிவனை கைது செய்து, மொரப்பூர் வனச்சரக அலுவலகம் கொண்டுவரப்பட்டு விசாரணை செய்ததில் அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    பின்னர் சிவன் மீது வனக்குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுரைப்படி, அரூர் உதவி வனப்பாதுகாவலர் சரவணன் ஆலோசனை படியும், சிவனை மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் ஆலயமணி, வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற ஆணைப்படி 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

    ×