search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cincinnati Open Tennis"

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா ஆகியோர் தகுதி பெற்றனர்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர், பிரான்சிஸ் தியாபோ உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    சின்சினாட்டி:

    பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு அரினா சபலென்கா (பெலாரஸ்) மற்றும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சபலென்கா 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), பிரான்சிஸ் தியாபோ (அமெரிக்கா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சின்னெர், முதல் செட்டை டை -பிரேக்கர் வரை சென்று போராடி கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். சின்னெர் இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • அரைஇறுதியில் இகா ஸ்வியாடெக்- அரினா சபலென்காவுடன் மோதினர்.
    • சின்சினாட்டி ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறினார்.

    மாசன்:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் மாசன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவை வீழ்த்திய 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) நேற்று அரைஇறுதியில் 3-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவுடன் (பெலாரஸ்) கோதாவில் குதித்தார்.

    தனது அதிரடியான ஷாட்டுகளால் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்ததுடன், சின்சினாட்டி ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.

    • டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.
    • நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரூனே, பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஹோல்கர் ரூனே, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் ஹோல்கர் ரூனே 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் கெயில் மான்பில்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரூனே, பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.

    ×