search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness Awareness Campaign Camp"

    • வாழப்பாடி புனித மைக்கேல் பள்ளியில், துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி முன்னிலையில், சுற்றுபுறத் துாய்மை விழிப்பு ணர்வு பிரச்சாரம் மற்றும் மாணவர்களின் சைக்கிள் பேரணி, மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.
    • இதனைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில், தூய்மை பாரத திட்டத்தின் நகரங்க ளின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவியருக்கு, திடக்கழிவு மேலாண்மை, குப்பை தரம் பிரித்தல், சுற்றுப்புற துாய்மையின் முக்கியவத்தும் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பேரூராட்சி தலைவர் கவிதா சக்கரவர்த்தி, செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் மன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில், வாழப்பாடி புனித மைக்கேல் பள்ளியில், துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி முன்னிலையில், சுற்றுபுறத் துாய்மை விழிப்பு ணர்வு பிரச்சாரம் மற்றும் மாணவர்களின் சைக்கிள் பேரணி, மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது. பள்ளி முதல்வர் ஆனக்ஸ் ராணி, தாளாளர் அந்தோணி யம்மாள் ஆகியோர் விழிப்பு ணர்வு முகாமிற்கான ஏற்பா டுகளை செய்திருந்தனர்.

    ×