search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coalition airstrikes"

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். #Coalitionairstrikes #Afghanistanmilitants
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

    பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.



    இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள அர்கன்டாப் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நேட்டோ படைகள் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோல், கஸ்னி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள அன்டார் மாவட்டத்தில் மேலும் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Coalitionairstrikes #Afghanistanmilitants 
    ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவூதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
    சனா:

    ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

    இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவூதி கூட்டுப்படைகள் களம் இறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவூதி அரேபியா மீது தீராப்பகையை உண்டாக்கி உள்ளது. இதனால் சமீப காலமாக சவூதி அரேபிய நகரங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவூதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த தாக்குதல்கள் துஹாயத், ஜபித், எல் உசேனியா மாவட்ட பகுதிகளில் நடந்து உள்ளன.

    மேலும் சவூதி கூட்டுப்படைகளின் உதவியுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அல் தஹார் மாவட்டத்தில் சில பகுதிகளை ஏமன் படைகள் மீட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
    ×