search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coffee dates milkshake"

    குழந்தைகளுக்கு மில்க்ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குளுகுளு காபி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 10
    பால் - அரை லிட்டர்
    காபி பவுடர் - 2 தேக்கரண்டி
    ஏலக்காய் - 4
    சர்க்கரை - தேவைக்கு
    ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு



    செய்முறை :

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி அது கொதிக்க ஆரம்பித்ததும் காபி பவுடரை கொட்ட வேண்டும்.

    அதனுடன் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கி விட வேண்டும்.

    மிக்சியில் பேரீச்சம் பழத்தை போட்டு சிறிது பால் சேர்த்து அரைக்க வேண்டும்.

    இறுதியில் மீதமிருக்கும் பால், ஐஸ்கட்டிகள் போன்றவற்றை சேர்த்து அடித்து கலக்க வேண்டும்.

    அடுத்து அதில் காபி டிகாஷன் விட்டு நுரைக்க அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

    சூப்பரான காபி மில்க் ஷேக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×