search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Amritana"

    • சில கிராமங்களை தோ்ந்தெடுத்து மாதந்தோரும் மனுநீதி நாள் முகாம் நடத்துவதன் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான்.
    • 211 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    ஊட்டி,

    பந்தலூரை அடுத்துள்ள எருமாடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 191 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கிராமங்களை தோ்ந்தெடுத்து மாதந்தோரும் மனுநீதி நாள் முகாம் நடத்துவதன் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான்.

    குறிப்பாக மக்களின் இருப்பிடத்திற்கே அரசு அதிகாரிகள் சென்று மனுக்களைப் பெற்றுக்கொள்வதோடு, தகுதிவாய்ந்த நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த முகாமில் 211 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும்.

    அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுகிறது.எனவே உடல்நலக் குறைவு உள்ளவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அனுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றாா்.

    தொடா்ந்து நடைபெற்ற முகாமில் முதியோா் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகைகளை 100 பயனாளிகள் பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

    மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.7.35 லட்சம் மதிப்பிலான கடனுதவி, தோட்டக்கலைத் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய நலத் திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

    முகாமில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, மகளிா் திட்ட இயக்குநா் பாலகணேஷ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, சுகாதராப் பணிகளின் துணை இயக்குநா் பாலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×