என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College student"

    • மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர்.
    • மாணவர் பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை அருகே தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரி விடுதியில் அடிக்கடி பணம் திருடுபோனது. எம்.எஸ்.சி. படிக்கும் சென்னை மாணவர் தான் இதில் ஈடுபட்டதாக நினைத்த, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மாணவரை தாக்கிய 13 மாணவர்களையும் இடைநீக்கம் செய்தது. அத்துடன் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர். இதில் 5 பேர் மைனர் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஒருவர் கோவை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட எம்.எஸ்.சி மாணவரை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    மாணவர் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து அந்த மாணவருக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர். கவுன்சிலிங் அளித்து அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    • காரைக்காலில் கல்லூரி மாணவி மாயமானார்.
    • 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு மாரியம்மன் கோவில் தெருவை ச்சேர்ந்தவர் ஆரவமுதன். இவரது மகள் ஈஸ்வரி தெய்வநாயகி(வயது19). இவர் கடந்த 21-ந் தேதி, வழக்கம் போல், வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று இரவு வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக உறவினர்கள், தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்கா ததால், தந்தை ஆரவமுதன், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில், மகளை தேடி  கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். மேலும், ஈஸ்வரி தெய்வநாயகி கல்லூரி சென்ற அன்று, கருநீலம் மற்றும் வெள்ளை கலரில் சுடிதார் அணிந்தி ருந்ததாகவும், இடது கை மணிகட்டில் ஏ.இ.எஸ்எச்யு. என பச்சை குத்தியிருப்பார்., இவரை பற்றி தகவல் தெரிந்தால், காரைக்கால் நகர காவல்நிலையம அல்லது, 04368228007, 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் புன்னைவனம் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
    • சமீப காலமாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் புன்னைவனம்(வயது 22). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

    சமீப காலமாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர் மீது தாக்குதல் நடத்த அயர்ன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
    • தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள், விடுதி அறைக்குள் இருந்த மற்றொரு மாணவரை இரக்கமின்றி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் கெஞ்சுவதையும், மன்னிப்பு கேட்பதையும், மாணவரை தொடர்ந்து தாக்குவதையும் காட்டுகிறது. அந்த மாணவரின் சட்டை கிழித்து, சட்டையை கழற்றவும் வற்புறுத்துவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.

    பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் அங்கித், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு மற்றும் கைகளில் பலத்த காயங்களும் உள்ளன.

    அங்கித் மீது தாக்குதல் நடத்த அயன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

    மேலும் தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனா்.
    • பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    திருப்பூர்:

    மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை நாடு முழுவதும் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளுக்கு சாகசப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லா மாவட்டம், நாா்கண்டா என்ற இடத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.

    இதில், பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு மலையேறுதல், ஆற்றைக் கடந்து செல்லுதல், தாவரங்கள், விலங்குகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதில், பங்கேற்பதற்காக பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவி வனபாா்வதி (விலங்கியல் துறை மூன்றாமாண்டு) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

    திருப்பூா் மாவட்டத்திலிருந்து இவா் ஒருவா் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவியை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனா்.

    • அருணா கடலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ்படித்து வருகிறார்.
    • எங்கும் கிடைக்காததால் பாபுபண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெரு சேர்ந்தவர் பாபு கட்டிட தொழிலாளி.இவருக்கு மனைவி,ஒரு மகன், ஒரு மகள்உள்ளனர். இவரது மகள்அருணா (வயது 19). இவர் கடலூரில்த னியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ்படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்தவர் திடீரென்று காணாமல்போய்விட்டார். இவரை பலஇடங்களில்தேடிஎங்கும்கிடைக்காததால் பாபுபண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்(பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன கல்லூரி மாணவிஅருணாவை வலைவீசி தேடுகின்றனர்.

    • கல்லூரி மாணவி கீர்த்திகா சம்பவத்தன்று எலி மருந்து தின்று மயங்கி விழுந்தார்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கீர்த்திகா பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் கீர்த்திகா (வயது 18). கல்லூரி மாணவி.

    சம்பவத்தன்று அவர் எலி மருந்து தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வண்ணார் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று கீர்த்திகா பரிதாபமாக இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றமகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

    உடுமலை :

    தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் படித்து வரும் ஜி.வைஷாலி (முதலாம் ஆண்டு மாணவி) 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், மேலும் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

    இந்நிலையில் கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகா் மஞ்சுளா, முதல்வா் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குநா் பா.சுஜாதா மற்றும் பேராசிரியா்கள் மாணவியை பாராட்டினா்.

    • கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.
    • தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் அருகே உள்ள கஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ரேணுகா தேவி (38). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது தாய் வீட்டில் தங்கி தனியார் டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் பாரதி (19). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். பாரதி தனது நண்பரும் உறவினருமான, அதே கல்லூரியில் படித்து வரும் பரணி (19) என்பவருடன் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.

    இருவரும் கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது, நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.இதனையடுத்து அவரை காப்பாற்ற முடியாமல் பரணி சத்தம் போட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டு, சத்தியங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகரில் கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நாராய ணமடம் தெருவைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் ஜெயரூபிணி (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஜெயரூபிணியின் குடும்பத்திற்கு தெரியவர அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ஜெயரூபிணி அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இது குறித்து அவரது தாயார் செல்வி பஜார் போலீசில் புகார் செய்தார். அதில், காதலனுடன் சென்றி ருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாணவியுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்.
    • எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சிவகுமார் மற்றும் விடுதி உரிமையாளர் ஷோபா அவரது உறவினர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ஹனம் கொண்டா பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த விடுதியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் 22 வயது மாணவி தங்கியிருந்தார். விடுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி மாணவி செல்போன் பயன்படுத்தி வந்தார். இதனை விடுதியின் உரிமையாளர் ஷோபா என்பவர் பார்த்துவிட்டார். அவர் மாணவியை மிரட்ட தொடங்கினார்.

    தன்னுடைய உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் விடுதியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டினார்.

    அவரது மிரட்டலுக்கு பயந்துபோன மாணவி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜயகுமார் மாணவியை அங்குள்ள ஒரு அறையில் வைத்து பலாத்காரம் செய்தார். ஒரு மாதத்திற்கு மேலாக மாணவியை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தார். மாணவியுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்.

    பின்னர் இதுகுறித்து விஜயகுமார் அவரது நண்பரான வாரங்கல் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் சிவகுமார் என்பவரிடம் தெரிவித்தார். அவரும் மாணவியை அடைய விரும்புவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியிடம் சிவகுமாருடன் உறவில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் செல்போனில் உள்ள போட்டோ வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்.

    இந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத மாணவி அவர்கள் கூறியபடி சிவகுமாரின் வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து சிவக்குமார் மாணவியை பலாத்காரம் செய்தார்.

    மாணவியின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட சிவகுமார் ஐதராபாத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவருக்கும் மாணவியை விருந்தாக்க துடித்தார்.

    இது குறித்து அவர் மாணவியிடம் கூறினார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அனைவரும் சேர்ந்து மாணவியை மிரட்டினர்.

    ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்ட மாணவி இது குறித்து ஹனம் கொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் மாணவியை ஒரு மாதத்திற்கு மேலாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் இது தொடர்பாக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சிவகுமார் மற்றும் விடுதி உரிமையாளர் ஷோபா அவரது உறவினர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பவித்ரா கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார்.
    • வீடு திரும்பிய போது பவித்ராவை வீட்டில் காணவில்லை.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் உள்ள பூதவராயன்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் என்பவரது மகள் பவித்ரா (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இரண்டா மாண்டு பி.ஏ., படித்து வருகிறார்.

    இவர் நேற்று கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரை வீட்டிலியே இருக்க சொல்லிவிட்டு அவரது தாயார் கடைக்கு சென்றார். வீடு திரும்பிய போது பவித்ராவை வீட்டில் காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் பலனில்லை. இதையடுத்து இவரது தாயார் விஜியலட்சுமி (வயது 50) புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    ×