search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student arrested"

    • 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார்
    • பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கர வேகமாக மோதியது.

    திருப்பூர் : 

    கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார் (27). இவரது மனைவி இந்துமதி (23). இந்த தம்பதிக்கு பிறந்து 6 மாதமே ஆன காஜல் என்ற பெண் குழந்தை உண்டு. கடந்த 12&ந் தேதி சேலத்திற்கு காரில் சந்தோஷ்குமார் குடும்பத்துடன் புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, இவர்களது கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கர வேகமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ்குமார் மற்றும் 6 மாத பெண் குழந்தையான காஜல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இந்துமதி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சந்தோஷ்குமார் ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது கோவை சௌரிபாளைத்தை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சித்தார்த் (22) என்பவரது கார் என்பது தெரியவந்தது. சித்தார்த் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த க்ளாட்வின் (21), ஆண்ட்ரிவ் (22), ஜீவன் (22) மற்றும் அருண் (22) ஆகியோர்களுடன் செங்கப்பள்ளிக்கு வரும் போது, விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் சித்தார்த் உள்பட 5 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்த சித்தார்த் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், கவனக்குறைவாக ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கல்லூரி மாணவர் ஜார்ஜ், மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை அறிந்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
    • விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போரூர்:

    மதுரவாயல் சத்யமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15வயது மாணவி அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருக்கு கடந்த ஆண்டு திருவள்ளூர் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் "இன்ஸ்டாகிராம்" மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாக தெரிகிறது.

    மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அடிக்கடி மிரட்டி ஜார்ஜ் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மாணவியிடம் இருந்து அடிக்கடி பணம் வாங்கி ஜாலியாக செலவு செய்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவர் ஜார்ஜ், மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை அறிந்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் கண்ணகி விசாரணை நடத்தியபோது கல்லூரி மாணவர் ஜார்ஜ், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜ், கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாணவியிடம் கூறி ரூ.15ஆயிரம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து மாணவி தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தபோது தான் கல்லூரி மாணவர் ஜார்ஜ்வுடன் மகளுக்கு பழக்கம் ஏற்பட்டதும் இதை பயன்படுத்தி அடிக்கடி வீட்டுக்கு வந்து அவர் மகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதன் உச்சகட்டமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு வந்த ஜார்ஜ், மாணவியிடம் அவரது தாயின் கண் முன்னே தகாத முறையில் நடந்துள்ளார். இதை தட்டிக் கேட்ட மாணவியின் தாய்க்கு அவர் மிரட்டல் விடுத்து தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போக்சோ மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவர் ஜார்ஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாணவன் யாரிடமும் அதிகமாக பேச மாட்டான் என நண்பர்கள் தெரிவித்தனர்.
    • போலீசாரின் தீவிர விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் கல்லூரி மாணவன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் 12-ம் வகுப்பு முடித்து காரிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு சேர்ந்தார். கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்ற மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடினர்.

    எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். தொடர்ந்து தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து அந்த மாணவருடன் நட்பாக இருந்தது யார்? யார்? என போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த மாணவன் யாரிடமும் அதிகமாக பேச மாட்டான் என நண்பர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் கல்லூரி மாணவன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அங்கு சென்று பார்த்த போது அவருடன் ஒரு இளம்பெண் இருந்தார். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த பெண் அதே கல்லூரியில் படித்த மாணவி என்பதும் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். மாணவனுக்கு 18 வயது முடியாத நிலையில் இளம்பெண்ணின் அழைப்பை ஏற்று அவன் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு பேரிகையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி உள்ளனர்.

    சிறுவனை கடத்தி சென்று திருமணம் செய்ததாக குழந்தை திருமண தடுப்பு சட்டம், அவனுடன் உல்லாசமாக இருந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் மாணவி மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு அந்த மாணவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். சிறுவன் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    • கடந்த 6 மாதத்தில் கல்லூரி மாணவர்கள் ரூ.4 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு உல்லாசமாக சுற்றி திரிந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் செய்தனர்.

    அந்த புகாரில் 2 இணையதள முகவரியில் ஒரு செல்போன் எண் பதிவாகி இருந்தது. அதில் உல்லாசமாக இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாங்கள் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோம். முதலில் எங்களது அழைப்பை எடுக்கவில்லை.

    சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் நீங்கள் எங்களை உல்லாசத்துக்கு அழைத்தீர்கள் என்று கூறி எங்களை மிரட்டினார்கள். மேலும் உங்கள் மீது போலீசில் புகார் செய்ய உள்ளோம் என்று கூறினார்கள். மேலும் போலீசில் புகார் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இதையடுத்து பயந்து போன நாங்கள் அவர்களுக்கு பணத்தை செலுத்தினோம். மறுநாள் வேறு ஒரு நம்பரில் இருந்து நாங்கள் போலீசார் பேசுகிறோம் உங்கள் மீது ஒரு புகார் வந்து உள்ளது. எனவே பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

    இதை உண்மை என்று நம்பி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு ரூ.85 ஆயிரத்தை செலுத்தினோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.

    இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சென்று போலீசார் செல்போன் எண்ணை கைப்பற்றினர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் கோவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் வேறு ஒருவரின் பெயரில் போலியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் 2 இணையதள முகவரியில் செல்போன் எண்களை பதிவிட்டு உல்லாசத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

    இதை உண்மை என நம்பி இந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்பவர்களை போலீசில் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பறித்தது தெரிய வந்தது.

    கடந்த 6 மாதத்தில் இவர்கள் ரூ.4 லட்சம் வரை இதுபோல் பணத்தை பெற்றுக் கொண்டு உல்லாசமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    இந்த கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் இவர்கள் இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர்களை கைது செய்ய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாரும், மாநகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவர்மன் மற்றும் போலீசார் சிங்காநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருப்பூர் ராமையா காலனியை சேர்ந்த அழகர்சாமி (வயது 49) என்பது தெரிய வந்தது.

    இவர் திண்டுக்கல்லில் இருந்து கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து கோவை ஹோப் கல்லூரி, நவ இந்தியா, சிங்காநல்லூர், சித்ரா சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கோவை ஜே.எம்.4 மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று அதிகாலை ரோந்து சென்றனர். ரெயில் நிலையத்தின் பார்சல் அலுவலக பகுதியில் சென்ற போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் ½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(வயது 48) என்பதும், கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இவர் கோவையில் யாருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டியை சேர்ந்த 16 வயது மாணவி கொசவபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும் ஆவிளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் பெருமாள் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர். பெருமாள் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுஜிந்தா ஜீவி சாணார்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அபுதல்கா, செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் குழந்தைகள் நல தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா கல்லூரி மாணவர் பெருமாளை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

    தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து போதை பொருட்கள் விற்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் போதை கும்பலை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு களியக்காவிளை பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அவர்கள் குமாரகோவில் சந்திப்பு பகுதியில் வரும் போது அங்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக தகவல்களை கூறினார். இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஆதித்யன் (வயது 21) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் சோதனை செய்த போது, அவர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்து தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் வைத்திருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆதித்யன் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    தொடர்ந்து போலீசார் மாணவரிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கியது? யார்-யாருக்கு விற்பனை செய்யப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ராஜபாளையம் அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகேயுள்ள ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பாஞ்சாலி (வயது 14). 8-ம் வகுப்பு படித்துள்ள இவர் டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதே தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (20) என்ற கல்லூரி மாணவர் கடந்த 2 வருடமாக பாஞ்சாலியிடம் நெருங்கி பழகினார்.

    அப்போது, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாஞ்சாலியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் பாஞ்சாலியை திருமணம் செய்ய பாலமுருகன் மறுத்து விட்டார். மேலும் சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

    இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் பாஞ்சாலி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலையில் பிளஸ்-2 மாணவனை திருமணம் செய்த வழக்கில் கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தனர்.

    இது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி விசாரணை நடத்தினார்.

    கெங்கலமகாதேவி கிராமத்திற்கு நேரில் சென்று போலீசாரின் உதவியுடன் அந்த மாணவியிடம் வாலிபரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் கல்லூரி மாணவி மேஜர் என்பதும், அந்த வாலிபர் பிளஸ்-2 படிக்கும் மைனர் (17 வயது) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது.

    இதையடுத்து பிளஸ்-2 மாணவரான மைனரை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் என்ற பெயரில் குடும்பம் நடத்தியதால் கல்லூரி மாணவி மீதும், அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததாக மைனர் வாலிபர் மீதும் வழக்குப்பதிவு செய்ய கடலாடி போலீசாருக்கு நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

    இதையடுத்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை கைது செய்தனர். மாணவன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். #tamilnews
    பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 20). கல்லூரி மாணவர். இவர் அதே பகுதியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் பிரவீன் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர். இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்ததால் அந்த முயற்சியை கைவிட்டனர். மேலும் மாணவியை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவையில் ரூ.50 லட்சம் கேட்டு வியாபாரியை கடத்திய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பசெட்டிவீதியை சேர்ந்தவர் விஷ்ணுராஜ்(வயது 40). பூ மார்க்கெட்டில் மொத்த பூ வியாபரம் செய்து வருகிறார்.

    கடந்த 30-ந் தேதி அதிகாலை, மொபட்டில் கடைக்கு சென்ற விஷ்ணுராஜை ஒரு கும்பல் காரில் கடத்தியது. பின்னர் அவரது தந்தை கோவிந்த ராஜூக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விஷ்ணு ராஜை தேடினர். நள்ளிரவில் அவர் திருச்சி அருகே பைபாஸ் சாலையில் காயங்களுடன் கிடக்கும் தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று விஷ்ணுராஜை மீட்டனர்.

    விஷ்ணுராஜின் வீடு அருகே உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் நல்லாம்பாளையத்தை சேர்ந்த தினகரன்(33), தடாகம் ரோட்டை சேர்ந்த சந்தோஷ் (22), உக்கடத்தை சேர்ந்த சதாம் உசேன் (23), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரி பிரசாத் (20), ராஜவீதியை சேர்ந்த அரவிந்த்(23), இடையர் வீதியை சேர்ந்த நாகராஜ்(26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் தினகரன், சந்தோஷ் ஆகியோர் பூ மார்க்கெட்டில் வேலை பார்க்கின்றனர். மற்ற 4 பேரும் இவர்களின் கூட்டாளிகள் ஆவர். கைதான ஹரி பிரசாத் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சந்தோசுக்கு விஷ்ணு ராஜின் வியாபார தொடர்புகள் குறித்து நன்கு தெரிந்துள்ளது. சந்தோஷ் மற்றும் பூ வியாபாரம் செய்யும் இவரது அண்ணன் பிரபு ஆகியோர் வியாபார ரீதியாக பணக்கஷ்டத்தில் இருந்துள்ளனர். தினகரனும் வியாபாரத்தில் நஷ்டமாகி லட்சக்கணக்கில் கடன் வாங்கி அடைக்க முடியாமல் திணறினார்.

    எனவே தங்களது கூட்டாளிகள் மூலம் விஷ்ணுராஜை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டியதாக சந்தோஷ், தினகரன் ஆகியோர் போலீசாரிடம் கூறினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    விஷ்ணுராஜ் சமீபத்தில் ரூ.50 லட்சத்துக்கு ஒரு வீடு வாங்கியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் பல பூ வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக பூ கொள்முதல் செய்து கேரளாவுக்கு அனுப்பி வருகிறார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கேரளாவுக்கு சென்று வசூல் செய்து விட்டு, மறுநாள் பணத்துடன் தனியாக கடைக்கு செல்வது வழக்கம்.

    அப்போது ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் அவரை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தோம். அதன்படி நண்பர் ஒருவர் மூலமாக மதுரையை சேர்ந்த சதீஷ்(38) என்பவரரை நாடினோம். அவர் தான் கடத்தல் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். நாங்கள் 2 பிரிவாக பிரிந்து திட்டத்தில் இறங்கினோம்.

    சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் விஷ்ணுராஜை கடத்தி காரில் கடத்தினர். பின்னர் நாங்களும் காரில் அவர்களுடன் சென்றோம். விஷ்ணுராஜ் சத்தம் போட்டதால் கத்தியால் குத்தி, மிரட்டினோம். அவரிடம் இருந்த ரூ.1½ லட்சத்தை பறித்துக் கொண்டு, அவரது தந்தை கோவிந்த ராஜூக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினோம்.

    அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதோடு, பிடி கொடுக்காமல் பேசினார். அவர் போலீஸ் நிலையம் செல்கிறாரா? என்பதை அறிவதற்காக நாங்கள் கடைக்கு திரும்பி, கோவிந்தராஜின் நடவடிக்கைகளை கண்காணித்தோம்.

    அப்போது கோவிந்தராஜ் போலீஸ் நிலையம் செல்வதை பார்த்தோம். எனவே போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக விஷ்ணுராஜை திருச்சி அருகே பைபாஸ் சாலையில் வீசிச்சென்றோம். போலீசார் துப்பு துலக்கியதில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு வாக்குமூலம் அளித்தனர்.

    இந்த கடத்தல் வழக்கில் சந்தோஷின் அண்ணன் பிரபு, மதுரையை சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.1½ லட்சம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், விஷ்ணுராஜின் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். #tamilnews
    காதலிப்பதாக கூறி பிளஸ்-1 மாணவிக்கு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 18). பொள்ளாச்சியில் அரசு கலை கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    இவர் அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுத்து மற்றும் போலீசார்சார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் முத்துக்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ×