என் மலர்
நீங்கள் தேடியது "College student"
- பவித்ரா கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார்.
- வீடு திரும்பிய போது பவித்ராவை வீட்டில் காணவில்லை.
கடலூர்:
சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் உள்ள பூதவராயன்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் என்பவரது மகள் பவித்ரா (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இரண்டா மாண்டு பி.ஏ., படித்து வருகிறார்.
இவர் நேற்று கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரை வீட்டிலியே இருக்க சொல்லிவிட்டு அவரது தாயார் கடைக்கு சென்றார். வீடு திரும்பிய போது பவித்ராவை வீட்டில் காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் பலனில்லை. இதையடுத்து இவரது தாயார் விஜியலட்சுமி (வயது 50) புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
- கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் ராம்குமார் (வயது 19). இவர் பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ராம்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை கண்டித்தனர். இதில் அவர்க ளுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த ராம்குமார் வீட்டை வெளியேறி அருகே உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடம் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கலியபெருமாள் கடந்த சில ஆண்டுக்கு முன்பு கலியபெருமாள் இறந்து போனார்.
- யாரும் இல்லாத நேரத்தில் கல்பனா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே திருவெண்ணைநல்லூர் போலீஸ் சரகம் கொ த்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். அவரது மனைவி மணிமேகலை. கடந்த சில ஆண்டுக்கு முன்பு கலியபெருமாள் இறந்து போனார். எனவே மணிமேகலை ஈரோட்டில் தங்கி கரும்பு வெட்டும் வேலைபார்த்து வருகிறது. அவரது மகள் கல்பனா (வயது20) தனது பாட்டி பவுனம்மாள் வீட்டில் தங்கி திருவெண்ணைநல்லூரில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார்.
இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்பனா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து பாட்டி பவுனம்மாள் பதறி போனார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். என்றாலும் மா மாணவி கல்பனா எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- ராஜேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றார்.
- கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள செல்வமருதூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 22). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுவனிடம் விசாரணை
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த சிறுவன் தனது நண்பரிடம் நான் கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துவார்கள் என நினைத்தேன். ஆனால் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரித்தனர் என்றான்.
இந்த தகவல் போலீசாருக்கு சென்றது. உடனடியாக வள்ளியூர் டி.எஸ்.பி. லோகேஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ஜோஸ் சிறுவனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினார்.
கொன்று புதைப்பு
அப்போது கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சம்பவத்தன்று சக நண்பர்களான 2 பேருடன் சேர்ந்து ராஜேந்திரனை தட்டார்மடம் அருகே உள்ள செம்மந்தேரிக்கு அழைத்து சென்று கொன்று புதைத்தது தெரியவந்தது.
உடல் தோண்டி எடுப்பு
இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சாத்தான்குளம் தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராஜேந்திரன் உடலை இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
- ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் சின்னத்தாய். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சின்னதாய் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் தென்காசி மாவட்டம் ஆவுடையாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக சாமி. இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு 2 வயதில் கவியரசன் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று மனைவி-மகனை வெம்பக்கோட்டையில் உள்ள கோவிலுக்கு ஆறுமுகசாமி அழைத்து சென்றார். சாமி கும்பிட சென்ற பத்மாவதி மகனுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்.
- கடலோர காவல் படையினர் மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஒத்தாளவெளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (வயது18).
இவர் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கூழையார் பகுதியில் உள்ள கடலில் தனது நண்பர்கள் 6 பேருடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி மாயமானார்.
இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கூழையார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்
- போலீஸ்காரர் மனைவி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
- இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே உள்ள சேதுநாராய ணபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது சேலத்தை சேர்ந்த போலீஸ்காரர் சந்தோஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் சேதுநாராயணபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். வத்திரா யிருப்பு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
சிவகாசி அருகே உள்ள போதுரெட்டியபட்டியை சேர்ந்த 20 வயதுடைய மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் மாரநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
திருச்சுழி சேதுபுரத்தை சேர்ந்தவர் லதா. இவரது மகள் கற்பகவள்ளி. இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததால் குடும்பத்தினர் கண்டித்தனர்.
இதனால் விரக்தியடைந்த கற்பகவள்ளி திடீரென மாயமானார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மகளுடன் மாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியை சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவரது மனைவி நாகரத்தினம். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகரத்தினம் தனது மகளுடன் மாய மானார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தானிய ஸ்ரீ நேற்று கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
- தந்தை ஆறுமுகம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கடலூர்:
சிதம்பரம் அருகே திருவக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் தானிய ஸ்ரீ. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் தானிய ஸ்ரீ நேற்று கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மீண்டும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தானிய ஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கே தெடியும் தனியா ஸ்ரீ கிடைக்கவில்லை. இதனால் தந்தை ஆறுமுகம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி தானிய ஸ்ரீ எங்கு சென்றார் என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்திச் சென்றனரா ? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- ராஜேஷ் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.
- பகுதி நேர வேலையாக சென்றவர் இதுவரைவீடு திரும்பவில்லை
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பண்டரக்கோட்டை சிவாலயாகார்டன் முருகன் என்பவரது மகன்ராஜேஷ் (வயது19) இவர் கடலூர்அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்துபண்ருட்டி கொய்யாப்பழம் லோடு ஏற்றி விடுவதற்காக பகுதி நேர வேலையாக சென்றவர் இதுவரைவீடு திரும்பவில்லை பல இடங்களில்தேடிஎங்கும்கிடைக்காததால் புதுப்பேட்டைபோலீசில் புகார்கொடுத்தனர்.புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்துகாணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வருகிறார்.
- தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.
- ரமேஷ் தனது மகளை திட்டி வெளியே அனுப்பி வைத்தார்.
கோவை,
சூலூர் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவை சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது இளைய மகள் திவ்யா (வயது 20).
பல்லடம் அரசு கல்லூரியில் பி.காம். 3-வது ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் ரமேஷின் மூத்த மகள் நர்மதா என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் மகேந்திரன் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு சென்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் தனது மகளை திட்டி வெளியே அனுப்பி வைத்தார். இதுகுறித்து கல்லூரிக்கு சென்ற திவ்யாவிடம் அவரது பாட்டி செல்போன் மூலமாக தெரிவித்தார். தனக்கு தெரியாமல் தனது அக்கா திருமணம் செய்ததால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
பின்னர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய திவ்யா வரும் வழியில் அந்த பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலுக்கு சென்றார். வாய்க்கால் முன்பு அழுது கொண்ேட நின்று கொண்டு இருந்த அவர் திடீரென வாய்க்காலில் குதித்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை தேடி வருகிறார்கள்.
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் மாயமானார்கள்.
- இந்த சம்பவங்கள் குறித்து தளவாய்புரம், ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் முப்பிடாதி. இவரது மகள் சமுத்திரகனி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் ராதிகா. கல்லூரி மாணவியான இவர், அதே பகுதியை சேர்ந்த காதலன் கனி என்பவருடன் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக் கோட்டையை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் பாரதி (38). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்து மாயமானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பரங்கிரி நாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(47). பிளாஸ்டிக் கடை நடத்தி வரும் இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் காந்திநகரை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது கணவர் கருப்பையா. குடும்ப பிரச்சினை காரணமாக மாரீஸ்வரி தாய் வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூரில் வேலை பார்த்து வரும் கருப்பையா சம்பவத்தன்று விருதுநகருக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கருப்பையா மாயமானார். பாண்டியன்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று ஊர் திரும்பி னார். ஆடு வியாபாரம் செய்து வந்த இவர் திடீரென மாயமானார். ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம்.
- தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஓ.சி.ஐ.டி. என்ற தனிப்படை அமைக் கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக திருச்சியிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சியில் உள்ள ஒ.சி.ஐ.டி. தனிப் படையினர் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பு வாலிபர்கள் சில நின்று கொண்டு கல்லூரி மாணவரிடம் போதை மாத்திரை விநியோகம் செய்வதை தனிப்படையினர் கண்டுபிடித்தனர். இதைடுத்து அந்த கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட நான்கு பேரை தனிப்படையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், போதை மாத்திரை வெளியூரில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், விற்க இருக்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் உதவியுடன் அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகளை விற்கும் முயற்சியில் இந்த கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம். இதையடுத்து அந்த பணம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சென்ற பிறகுதான் போதை மாத்திரையை கும்பல் மாணவரிடம் கொடுப்பார்கள் என தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.