search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commission of surgeon treatment"

    ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற டாக்டர் பாலாஜியை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் பொறுப்பில் இருந்து தமிழக அரசு விடுவித்தது.
    சென்னை:

    தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக சென்னை மருத்துவக்கல்லூரியில் நுண்துளை அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் பி.பாலாஜி கடந்த 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

    இவருடைய பதவி நியமனத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தன்னை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு டாக்டர் பி.பாலாஜி தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.

    அதன்பேரில் அவரை அந்த பொறுப்பில் இருந்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.

    இதையடுத்து டாக்டர் பாலாஜி வகித்து வந்த பொறுப்பு சென்னை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காந்திமதிக்கு வழங்கப்பட்டது.

    அவர் வெளிநாடு சென்றிருந்ததால் உடனடியாக அந்த பதவியில் அமரவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய டாக்டர் காந்திமதி தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் குறித்த ஆவணத்தில் அவருடைய கை ரேகையை டாக்டர் பி.பாலாஜி தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×