என் மலர்
நீங்கள் தேடியது "Competitive Exam"
- ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ்.
- அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்ததால் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ். கடந்த புதன்கிழமை மாலை இவர் கிராம நூலகத்தில் படித்துகொண்டிருந்தபோது ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.
ஆனால் வண்ணம் பூசிக்கொள்ள ஹன்ஸ்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் உதைத்து, பெல்ட்டால் விளாசியுள்ளனர்.
இதன் உச்சமாக மூவரில் ஒருவன் ஹன்ஸ்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்தான். பின்னர் மூவரும் தப்பியோடிய நிலையில் ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூவரையும் கைது செய்ய வேண்டும் என நெடுஞ்சாலையில் உடலை கிடத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரின் உறுதிமொழியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
- போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
- வெற்றி இலக்கை எளிதில் அடைவதற்கு
அரியலூர்:
என்றார் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் மு.சந்திரன்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான (எஸ்.எஸ்.சி) இலவச பயிற்சியை திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் மு.சந்திரன் தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும் போது,
போட்டித் தேர்வுக்கு நீங்கள் தயாராக செல்வதற்காக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால் தான் போட்டித் தேர்வில் நீங்கள் வெற்றிப் பெற முடியும்.
போட்டித் தேர்வில் பங்கு கொள்வது உங்கள் இலக்கு அல்ல, அதில் வெற்றி பெறுவது தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும் சமுதாயத்திற்கானது. புத்தகத்தை கையில் வைத்து படிப்பது முக்கியம் இல்லை, படிப்பதை மனதிற்குள் எடுத்துக் கொள்வது தான் முக்கியம். தன்னம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டால வெற்றி என்ற இலக்கை எளிதில் அடையலாம் என்றார். பின்னர் டிஎன்பிஎஸ்சி, பிளஸ்-2 தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
- மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரையில் இன்று முதல் தொடங்குகிறது
- இந்த போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4.1.2023 ஆகும்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் மாநில மற்றும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ள SSC CHSL போட்டித்தேர்விற்கு தோராயமாக 4 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேல்நிலை படிப்பு (பிளஸ்-2) முடித்த 18 வயதிற்கு மேற்பட்ட போட்டித்தேர்வாளர்கள் இந்த பணியிடத்திற்கு ssc.nic.in என்ற இணையதசத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4.1.2023 ஆகும்.
மேலும் இந்த போட்டி தேர்வு உத்தேசமாக வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த வல்லுநர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்து கின்றனர்.
மேற்கண்ட போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள போட்டித்தேர்வாளர்கள் விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்ப நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
- புதுவை மாநில ஏழை எளிய மாணவ-மாணவிகள் எல்.டி.சி., யூ.டி.சி., ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கான போட்டி தேர்வினை பயமின்றி எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சியை வழங்க அனுபவமிக்க ஆசிரியர் இங்கு வந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதனை விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர், தாளாளர் செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்து பேசியதாவது:-
புதுவை மாநில ஏழை எளிய மாணவ-மாணவிகள் எல்.டி.சி., யூ.டி.சி., ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கான போட்டி தேர்வினை பயமின்றி எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சியை வழங்க அனுபவமிக்க ஆசிரியர் இங்கு வந்துள்ளனர்.
இந்த பயிற்சி 45 நாட்கள் நடைபெற உள்ளது.காலை மாலை 2 பிரிவுகளாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- போட்டித் தேர்வு எழுதுவதற்கு தமிழ் வழியில் இலவச பயிற்சி வகுப்புகளை ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை நடத்தி வருகிறது.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு போட்டி தேர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.
திருச்செந்தூர்:
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற தமிழக அரசின் ஆணையால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பதிதாக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் இளங்கலை பொருளியல் மாணவர்கள் தமிழ் வழியில் பயில்வதால், அவர்களுக்கு போட்டித் தேர்வு எழுதுவதற்கு தமிழ் வழியில் இலவச பயிற்சி வகுப்புகளை ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை நடத்தி வருகிறது.
இதன் தொடக்க விழாவில் பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு போட்டி தேர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கி பேசுகையில், மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், என்றார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், திருச்செந்தூர் வழக்கறிஞருமான வி.நடேசன் ஆதித்தன் கலந்து கொண்டு, கல்லூரியின் சமூக தொண்டுகள் பற்றியும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் பற்றியும், போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் விளக்கி கூறினார்.
பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சி.முருகேஸ்வரி நன்றி கூறினார். பயிற்சி வகுப்பு இயக்குனர் உமாஜெயந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சுந்தரவடிவேல், ராஜ்பினோ, மோதிலால் தினேஷ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துக்குமார், மாலைசூடும்பெருமாள், கணேசன், சிவமுருகன், அசோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
- பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 11 ஆயிரம் காலி அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிரா விடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம்முதல் ரூ.22 ஆயிரம் வரை வழங்கப்படும். மேற்கண்ட தேர்வுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
- கல்லூரியில் படிப்பவர்களும் பகுதி நேரமாக இதில் சேர்ந்து பயனடையலாம்.
புதுச்சேரி, ஜூன் 24-
தேசிய வாழ்வாதார மையத்தின் புதுவை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராக மையத்தின் சார்பில் ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
வருகிற 10-ந் தேதி முதல் தலைசிறந்த தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் சேர ஆர்வமுள்ள 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டய படிப்பு படித்தவர்கள், படித்துக் கொண்டிருப்ப வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மையத்தில் வழங்கப்படு கிறது. இதற்கான வயது வரம்பு 18 முதல் 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாலைநேரத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
கல்லூரியில் படிப்பவர்களும் பகுதி நேரமாக இதில் சேர்ந்து பயனடையலாம். மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு பயிற்சி புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்படும். வருகிற 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது.
- வழிமுறைகளை தெரிந்து கொண்டு போட்டித்தேர்வுக்கு தயார் செய்தால் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் செவல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசியதாவது:-
உலகத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக எளிதாக இருக்காது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்பது வாழ்க்கை என்ற போர்க் களத்தில் போர் புரியும் வாள். ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டு முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எதற்கு, எப்படி என்ற கேள்வியை விட நாம் ஏன் செய்கிறோம் என்பது தான் மிக முக்கியம். மாணவர்கள் தற்போது படிப்பதற்கான நோக்கம் நீங்கள், உங்கள் குடும்பம், சமுதாயம் முன்னேற வேண்டும் என்ப தற்காக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொதுநோக்கு சிந்தனையை கல்வி கற்று தருகிறது. ஆக்கமிக்க தொழிலை முதலில் தேர்வு செய்திட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள், சமூகம் ஆகியவற்றுடன் தினந்தோறும் நிறைய உரையாட வேண்டும். உரையாடல்கள் புதிய னவற்றை கற்றுத்தரு கின்றன.
எனவே சிந்தனைத் திறன், ஆர்வம், படைப்பு திறன், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு உள்ளிட்ட பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் ஒரு புதிய வரலாற்றை படைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விருதுநகர் தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு, பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.
- வழிமுறைகளை தெரிந்து கொண்டு போட்டித்தேர்வுக்கு தயார் செய்தால் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் செவல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசியதாவது:-
உலகத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக எளிதாக இருக்காது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்பது வாழ்க்கை என்ற போர்க் களத்தில் போர் புரியும் வாள். ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டு முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எதற்கு, எப்படி என்ற கேள்வியை விட நாம் ஏன் செய்கிறோம் என்பது தான் மிக முக்கியம். மாணவர்கள் தற்போது படிப்பதற்கான நோக்கம் நீங்கள், உங்கள் குடும்பம், சமுதாயம் முன்னேற வேண்டும் என்ப தற்காக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொதுநோக்கு சிந்தனையை கல்வி கற்று தருகிறது. ஆக்கமிக்க தொழிலை முதலில் தேர்வு செய்திட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள், சமூகம் ஆகியவற்றுடன் தினந்தோறும் நிறைய உரையாட வேண்டும். உரையாடல்கள் புதிய னவற்றை கற்றுத்தரு கின்றன.
எனவே சிந்தனைத் திறன், ஆர்வம், படைப்பு திறன், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு உள்ளிட்ட பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் ஒரு புதிய வரலாற்றை படைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தினமும் 120 மாணவ-மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள்.
- போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. தினமும் 120 மாணவ-மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பயிற்சி வகுப்புக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார். மாதிரி தேர்வுகளை அதிகம் எழுத வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் 7-வது மாடியில் அறை எண்.713-ல் செயல்படும் நூலகத்தை கலெக்டர் பார்வையிட்டார். இங்கு தினமும் 60 பேர் புத்தகங்களை தேர்வு செய்து படித்து தயாராகி வருகிறார்கள். அவர்களிடம் கலெக்டர், தான் தினமும் சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு சென்று போட்டித்தேர்வுக்கு தயாரான அனுபவத்தை அவர்களிடம் பகிர்ந்தார்.
போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு தேவையானவற்றை தெரிவித்தால் செய்து கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார். இதில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் உடனிருந்தார்.
- CGPSC-2023 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது
- ராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்தவர்.
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற ஒரு பியூன் கடினமான சத்தீஸ்கர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (CGPSC) தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
கடந்த ஏழு மாதங்களாக தலைநகர் ராய்பூரில் உள்ள CGPSC அலுவலகத்தில் பியூனாக பணிபுரியும் 29 வயதான பட்டியலின விவசாய குடும்பத்தை இளைஞர் சைலேந்திர குமார் பந்தே, தனது ஐந்தாவது முயற்சியில் சத்தீஸ்கர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, இப்போது மாநில வரித்துறையில் உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட CGPSC-2023 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், பொதுப் பிரிவில் 73 வது ரேங்க் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவில் 2 வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
ராய்ப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர குமார், அங்குள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்தவர்.
ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, பந்தே தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்லாமல் ஒரு அரசாங்க ஊழியராக ஆசைப்பட்டதால் தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால் குடும்பத்தை சூழலை கடந்த காரணமாக கடந்த மே மாதம் முதல் அரசு அலுவலகத்தில் பியூன் வேலை பார்த்து வந்துள்ளார்.
- மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
- எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] நேற்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இருப்பினும், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் வினியோகத்தில் தாமதுதித்து தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம்சாட்டி பல மாணவர்கள் பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
அப்போது பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் சந்திரசேகர் சிங் ஒரு மாணவரை அறைந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களை போலீஸ் அந்த இடத்திலிருந்து விரட்டியடிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.