search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "completition"

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி
    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவிகள் சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மாணவிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்க்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி புதுக்கோட்டையில் உள்ள சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பிரியதர்ஷினி, ஜெ.ரித்திகா ஆகியோர் தங்கப்பதக்கமும், பி.துர்காதேவி வெள்ளிப்பதக்கமும் மற்றும் சிவரஞ்சனி வெண்கலப்பதக்கமும் பெற்று ஒட்டுமொத்தமாக இரண்டாம் (ரன்னர்அப்) இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.மேலும், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கு பெரம்பலூர் மாவட்டம் தடகள சங்கம் சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் எம்.ஜி.ஆர். மைதானத்தில் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் முதல் கடந்த 5-ந்தேதி வரை போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று ரூ.1,58,000 பரிசு தொகையை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து மற்றும் வளைகோல்பந்து போட்டிகளில் முதல் இடமும், கபாடி போட்டியில் இரண்டாம் இடமும், கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் மூன்றாம் இடமும் பெற்றது.குறிப்பாக இதில் தடகள போட்டிகளில் சி.சாருமதி 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் இடமும், செ.வினோதினி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், செ.தனலெட்சுமி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் மற்றும் சர்மிளா சிலம்பம் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர் .மேலும் ஒவ்வொரு வெற்றிபெற்ற அணியில் இருந்தும் 32 மாணவிகள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.அகிலா, துணை உடற்கல்வி இயக்குனர்கள் ப.சிவரஞ்சனி, டேக்வாண்டோ பயிற்சியாளர் பரணிதேவி, முதல்வர் முனைவர் உமாதேவி பொங்கியாவைம், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    ×