என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "concert"

    • ஜெய பாரத் ஹோம்ஸ் சார்பில் டைட்டன் சிட்டி தொடக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி மதுரையில் இன்று மாலை நடக்கிறது
    • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    மதுரை

    ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யா நகரில் டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்திற்கான தொடக்க விழா இன்று (5-ந் தேதி) மாலை நடக்கிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்கிறார்.

    இதுகுறித்து ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்ட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.ஜெயகுமார் தலைமை தாங்குகிறார். நிர்வாகி ஜெ.நிர்மலாதேவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இசை நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றார்.

    சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல் துறையின் இசைக்குழுவினர் இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

    அதற்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தோம். நேர்த்தியான இசையை வழங்கியதைக் கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறை சார்பில் பொது வெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • மும்பையில் ஜனவரி 18 மற்றும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
    • கள்ளச்சந்தையில் 1 டிக்கெட் ரூ.3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

    இசைக்கான உயரிய விருதான கிராமி விருதுகளை வென்று உலக அளவில் ரசிகர்களை கொண்ட பிரிட்டனை சேர்ந்த பிரபல ராக் [ROCK] இசைக்குழுவாக கோல்ட்ப்ளே [COLD PLAY] திகழ்கிறது. அவர்களது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அடுத்த வருடம் [2025] ஜனவரியில் இந்தியா வருகை தர உள்ள கோல்ட்ப்ளே மும்பையில் தொடர்ச்சியாக ஜனவரி 18 மற்றும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.

    கோல்ட்ப்ளே இசைக்கு மும்பையில் அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதால் இந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோல்ட்ப்ளே நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனையை புக் மை ஷோ [BOOK MY SHOW] இணையதளம் அதிகாரபூர்வமாக விற்பனை செய்தாலும் டிமாண்ட் காரணமாக மற்ற தளங்களில் டிக்கெட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

    டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் "லவுஞ்ச்" இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் BOOK MY SHOW -ல் 1 டிக்கெட் ரூ. 35,000க்கு விற்கப்பட்டன. ஆனால் தற்போது கள்ளச்சந்தையில் இவ்வாறு சட்டவிரோதமாககள்ளச்சந்தையில் 1 டிக்கெட் ரூ.3 லட்சம் முதல் ரூ. 7.7 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

    எனவே இவ்வாறு நடக்கும் கள்ளச்சந்தை வியாபாரம் குறித்து BOOK MY SHOW நிறுவனம் சார்பில் போலீசிலும் புகார் அளித்துள்ளது. மேலும் முறையற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் BOOK MY SHOW தெரிவித்துள்ளது. ஆனால் அதிக காசு கொடுத்து வேறு தளங்களில் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அவை செல்லாது என அறிவிக்கப்ட்டுள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.

    • குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை.
    • வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது.

    மணிலா:

    தாய்லாந்தின் வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் நள்ளிரவில் இசை திருவிழா நடந்தது.

    இதில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்தது. இதனால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.


    இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்த பகுதி மியான்மர் எல்லைக்கு அருகே உள்ளது. அங்கு கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே கே.என்.யூ என்ற கிளர்ச்சிக் குழுவினர் தங்களது எதிரிகும்பலுடன்' மோதலில் ஈடுபட்டதாகவும், அப்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை அந்த கிளர்ச்சி குழு மறுத்துள்ளது.

    இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் தனதிப் சவாங்சாங் கூறும்போது, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது.

    அந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர் என்றார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அவர் கடந்த சனிக்கிழமை நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்.
    • நீங்கள் மதுபானங்களை தடை செய்யும் வரை நான் அதுகுறித்து படுவதை நிறுத்தமாட்டேன்

    நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படாத வரை இந்தியாவில் இனி நேரலை இசைக் கச்சேரிகளை நடத்த மாட்டேன் என்று பிரபல பஞ்சாப் பாடகர் தில்ஜித் தோசன்ஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    ரசிகர்களை கலங்கடிக்கும் இந்த அறிவிப்பை அவர் ஏன் வெளியிட்டார் என்றால் கடந்த சனிக்கிழமை சண்டிகரில் அவர் நடத்திய லைவ் கன்சர்ட்டில் போதுமான வசதிகள் இல்லாமல் திண்டாடியுள்ளார். கான்செர்ட்டின்போது அதிகாரிகளிடம் அவர் காட்டமாக நடந்துகொள்ளும் வீடியோவும் வெளியானது.

    எங்களை (கலைஞர்களை) தொந்தரவு செய்வதற்குப் பதிலாக, உங்கள் கச்சேரி உள்கட்டமைப்பை மேம்படுத்துங்கள் அல்லது இந்தியாவில் நான் நிகழ்ச்சி நடத்த மாட்டேன். இதை நிர்வாகத்திடம் கூற விரும்புகிறேன். நேரலை நிகழ்ச்சிகளுக்கு இங்கு சரியான வசதிகள் இல்லை.

    இது பெரிய வருவாய் ஆதாரமாகும். நிறைய பேர் இந்த நிகழ்வுகளில் வேலை செய்கிறார்கள் மற்றும் அதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்று சமூக வலைத்தளம் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.

    சனிக்கிழமை சண்டிகரில் நடந்த தில்ஜித் இசைக் கச்சேரி அவரது "தில்-லுமினாட்டி இந்தியா டூர் 2024" இன் ஒரு பகுதியாகும். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அவர் கடந்த சனிக்கிழமை நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்.

    முன்னதாக ஐதராபாத்தில் இசைக் கச்சேரி நடத்தியபோது மதுபானங்களை குறித்து பாடக் கூடாது என்று நிர்வாகம் தெரிவித்தது. நீங்கள் மதுபானங்களை தடை செய்யும் வரை நான் அதுகுறித்து படுவதை நிறுத்தமாட்டேன் என்று தில்ஜித் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.
    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரி வரவேற்பை பெற்றது.

    பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக்குழுவான கோல்ட் பிளே[Coldplay] 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' என்ற தலைப்பில் வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக இந்தியா வருகை தந்தது. மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.

    பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்திருந்தன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

    இந்நிலையில் கோல்ட் பிளே கச்சேரிகளைச் சிலாகித்துள்ளார். இந்தியாவில் நேரலை இசை நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று அவர் கூறினார்.

    நாட்டில் இசைக்கச்சேரி பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகவும் இந்த துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், மாநில அரசுகளும், தனியார் துறையும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக மோடி கூறினார்.

    புவனேஸ்வரில் நடந்த ஒடிசா கான்க்ளேவ் 2025 நிகழ்ச்சியில் பேசிய மோடி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ட்ப்ளே கச்சேரிகளின் அற்புதமான படங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இந்தியாவில் நேரடி கச்சேரிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது.

     

     உலகெங்கிலும் உள்ள பெரிய கலைஞர்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளின் போக்கு அதிகரித்துள்ளது என்றார்.

    அடுத்ததாக 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக கோல்ட் பிளே குழு ஹாங் காங் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இவர் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது.
    • காதலர் தினத்தை முன்னிட்டு bye bye bhaiya பாடலை இசையமைத்து, பாடி ஒரு இண்டிபெண்டண்ட் பாடலாக வெளியிட்டார்.

    ஹிப்ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராவார். இவர் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. இவர் இயக்கி நடித்து தயாரித்து கடந்த ஆண்டு வெளியான கடைசி உலகப் போர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அவ்வபோது மியூசிக் டூரை நடத்தி வருகிறார். உலகமெங்கும் பல நாடுகளில் கான்செர்ட் நிகழ்ச்சிகளை செய்கிறார். சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு bye bye bhaiya பாடலை இசையமைத்து, பாடி ஒரு இண்டிபெண்டண்ட் பாடலாக வெளியிட்டார். அதில் யூடியூப் பிரபலம் ஹர்ஷத் கான் நடித்து இருந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக ஹிப்ஹாப் ஆதி சிங்கப்பூரில் ஒரு கான்செர்ட் நிகழ்ச்சி நடத்தவுள்ளார். அப்பொழுது அவர் அங்கு நடிகர் மற்றும் தொழிலதிபரான நெப்போலியனை சந்தித்தார். அவரை சந்திப்பை குறித்து தற்பொழுது அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் அதே பாசம் ❤️ என் மனம் கவர்ந்த கலைஞர், மனிதர் - எங்கள் அன்பிற்குரிய நெப்போலியன் அண்ணா". இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இவர்கள் இருவரும் அன்பறிவு திரைப்படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே நரசிங்கன்பேட்டை புவிசார் குறியீடு பெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியீட்டு விழா, இசைக்கருவி தயாரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா, நாதஸ்வர இசை திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வரவேற்றார்.

    நாதஸ்வர கலைமாமணி கணேசன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம், வக்கீல் சஞ்சய் காந்தி, ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய குழு துணை தலைவர்கள் அண்ணாதுரை, பத்மாவதி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நாதஸ்வரம் அஞ்சல் உரையை அஞ்சல் மண்டல தலைவர் அப்பா க்கண்ணு கோவிந்தராஜன் வெளியிட அதைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பெற்றுக் கொ ண்டார்.முன்னதாக கலைமா மணி மீனாட்சி சுந்தரம், சேஷகோபாலன் சகோத ரர்கள், வித்வான்கள் கார்த்திக், தங்க ராஜா, மனோ கரன், ராதாகிருஷ்ணன், குருநாதன் , ராஜாராமன் ஆகியோர் இணைந்து 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உஷா, ராஜா, பேரூராட்சி தலைவர்கள் புனிதா ஜெயபால் வனிதா ஸ்டாலின் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேதராப்பட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
    • கோவில் விழாவையொட்டி அங்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க ராம்குமார் சென்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கோவில் விழாவையொட்டி நடந்த பாட்டு கச்சேரியில் ஏற்பட்ட மோதலில் தனியார் நிறுவன ஊழியருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    வில்லியனூர் அருகே அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது23). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் விழாவையொட்டி அங்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க ராம்குமார் சென்றார். அங்கு கூட்ட நெரிசலில் நின்று ராம்குமார் பாட்டி கச்சேரியை ரசித்துகொண்டிருந்த போது அங்கு வந்த கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ராம்குமாரிடம் இங்கு நிற்க வேண்டாம் எனது மகன்களுக்காக இடம் பிடித்து வைத்திருக்கிறேன். எனவே இங்கிருந்து சென்று விடு என வெங்கடேசன் கூறினார்.

    அதற்கு ராம்குமார் நான் இங்கிருந்து செல்ல முடியாது என்று மறுத்தார். இதனால் ராம்குமாருக்கும், வெங்கடேசனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெங்கடேசன் செல்போனில் பேசி தனது மகன்களான தினகரன் மற்றும் விஜயகுமாரை அழைத்தார்.

    இதையடுத்து சற்று நேரத்தில் தினகரன், விஜயகுமார் மற்றும் அவருடன் மற்றொருவர் அங்கு வந்தனர். அவர்கள் ராம்குமாரிடம் எங்கள் ஊரில் வந்து எங்களது அப்பாவிடமே தகராறு செய்கிறாயா? என கூறி தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    இதனை ராம்குமார் தட்டிக்கேட்ட போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து ராம்குமாரை தடியாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் வெங்கடேசன் அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ராம்குமாரின் தலையில் குத்தினார். அதோடு ராம்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ராம்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ராம்குமார் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
    • துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதனை பலர் பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் இசை ரசிகர்கள் மீ து சரமாரியாக சுட்டான். இதனால் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×