என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Conflict"

    • சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 25 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
    • பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தேசிய விடுமுறை நாளான குடியரசு தினத்தில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அல்லது அவா்களது சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிலாளா் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது, சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 25 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 33 முரண்பாடுகளும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 2 முரண்பாடுகளும் என மொத்தம் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் சாா்நிலை அலுவலகப் பணியாளா்கள் மூலம் குழந்தை தொழிலாளா் முறை அகற்றுதல், அபாயகரமான தொழில்களில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினா் அகற்றுதல் குறித்தான விழிப்புணா்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் தனபாலன் தெரிவித்துள்ளாா்.

    • மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி உயிரிழந்தார்.

    பாபநாசம்:

    திருச்சி மாவட்டம், குறிச்சி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் மணிகண்டன் (43).

    இவர் கடந்த 23 ம் தேதி இரவு தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சா லையில் பாபநாசம் தெற்கு வீதி, கடைவீதியில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து மணிகண்டனின் தாயார் நாகரத்தினம் (65) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ஆலங்குடி அருகே பள்ளி மாணவர்கள் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
    • உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இம்மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காமராஜர் சிலை பஸ் ஸ்டாப் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில் கவி, பிரபஞ்சன் என்ற இரு மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாங்கோட்டை பகுதியில் மீண்டும் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதில் மாங்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த அஜிந்திரன் (22), நவீன் (16), விஸ்வா (17) ஆகியோரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இரு தரப்பு மாணவர்களைச் சேர்ந்த உறவினர்கள் மாங்கோட்டை விளக்கு ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி தீபக் ரஜினி மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    • குளித்தலை அருகே இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர்
    • இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    குளித்தலையை அடுத்த கொசூர் பஞ்., கம்பளியாம்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 27), கூலி தொழிலாளி. இவர் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்றார். அப்போது, அதே ஊரை சேர்ந்த இளையராஜா (35), அவரது மனைவி சுசிலா (30, ஆகியோர், எங்கள் விவசாய நிலத்தில் இயற்கை உபாதை கழிக்கலாமா" என கேட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர். இதில், அம்பிகா, இளையராஜா, சுசிலா மூவரும் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பிகா கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கொண்டு வந்த மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் அருகே உள்ள பிராந்தை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 25). இவர் நேற்று இரவு தஞ்சையில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருவாரூரிலிருந்து தஞ்சை நோக்கி ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கொண்டு மினி வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மினிவேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அரவிந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிணறு மற்றும் குளம் இருப்பதால் தண்ணீர் மாசுபடும் என தெரிவித்து. அந்த இடத்தில் நெ ல்கொள்முதல் நிலையம் அமைக்க அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபாலன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர் திறந்து வைத்தார். அந்த பகுதியில் கிணறு மற்றும் குளம் இருப்பதால் தண்ணீர் மாசுபடும் என தெரிவித்து. அந்த இடத்தில் நெ ல்கொள்முதல் நிலையம் அமைக்க அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபாலன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அங்கு வந்த அதிகாரியுடன் பூபாலன் இந்த பகுதியில் நெல் கொள்முதல் திறக்க கூடாதுஎதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தி.மு.க.வினரும் பூபாலன் தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றிஒருவருக்கொருவர் திடீரென கட்டி புரண்டு தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது. அங்கிருந்த பொதுமக்கள்மோதிக்கொண்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.பிரச்சனை முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஒரு தரப்பினர் நெல் கொள் முதல் நிலையத்தை தி.மு.க. அவைத் தலைவர் திறந்து வைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை.
    • இதில் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை. இது குறித்து மணி உள்ளிட்ட நான்கு பேர் கோவில் நிர்வாகி மோகனை கேட்டனர். இதில் மணி தரப்பினருக்கும், மோகன் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில்கோவில் நிர்வாகி மோகன், ராமசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                     இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மணி, மோகன்தாஸ், பரசுராமன், ராஜ் ஆகியோர் மீதும், ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் இளையராஜா, ரமேஷ், முருகன், பாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் மீது தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜனனி (வயது 21) இவர் மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தபோது,எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது
    • இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் ஜனனி (வயது 21) இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் திம்மாபுரம் கிரா மத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தார். சின்னசேலம் மின்சார அலுவலகம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர் 

     அப்போது தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் பேரக்குழந்தைகளான பார்கவி (வயது 12)வெற்றி மாறன் (வயது 7)ஆகியோ ருடன் இருசக்கர வாக னத்தில் வந்தார். எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது. இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 5பேரும் சேர்க்கப்பட்டனர். ன்னர் ஜனனியை மட்டும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை ஜனனி பரிதாப மாக இறந்து போனார். இது குறித்து ஜனனி தந்தை சின்ன துரை கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
    • அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த பி. என்.பாளையத்தை சேர்ந்தவர் கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கீதா கேட்டபோது முத்துக்குமரன் மனைவி மங்கைக்கும், கீதா தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் மங்கை மற்றும் கீதா ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் மங்கை கொடுத்த புகாரின் பேரில் கீதா, ராஜா, அசலாம்பாள், ராதா ஆகியோர் மீதும், கீதா கொடுத்த புகாரின் பேரில் மங்கை மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனர்

    திருச்சி:

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனர். பின்னர் அந்தப் பணத்தை பிரிப்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடும், தகராறும் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து திருச்சி அம்மா மண்டபம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த கொக்கரக்கோ என்கிற பிரசாந்த் (வயது 21) மற்றும் அவரது நண்பர்கள் ஹரி, விஜய், அசோக்,வெங்கடேசன் ஆகியோர் பணத்தை தர மறுத்தனர்.

    பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஸ்ரீரங்கம் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (23), அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் (23), ரெக்ஸ் என்கிற ரெட்டி ஆகிய 3 பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ராஜேஷுக்கு இடது கையிலும், மாதவனுக்கு தலையிலும், ரெக்ஸ் என்கிற ரெட்டிக்கு தோள்பட்டையிலும் வெட்டு விழுந்தது.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
    • இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப்பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பூலம், மேலத்தெருவை சேர்ந்தவர் ஊய்க்காட்டான் மனைவி சந்திரலேகா (வயது37). இவர் நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா துணை தலைவியாகவும், திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருந்தாளுனராகவும் உள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி முத்து செல்வி (50). இவர் பூலம் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.

    தாக்குதல்

    சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப் பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து முத்து செல்வியும், அவரது கணவர் முத்துராஜும் (55) சேர்ந்து, சந்திரலேகாவை தாக்கிய தாகவும், இதுபோல சந்திர லேகா, முத்துராஜை தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இருவரும் தனித்தனியாக மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தனர். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் இது தொடர்பாக சந்திரலேகா, முத்துசெல்வி, அவரது கணவர் முத்துராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சந்திர லேகாவை தாக்கிய பஞ்சாயத்து தலைவி முத்து செல்வி மற்றும் அவரது கணவர் முத்துராஜை கைது செய்ய கோரி, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் பா.ஜ.க.வினர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). இவர் தனது வீட்டின் அருகே சிறிய கோவில் கட்டி வருகிறார்.அப்போது இவரது தம்பி கண்ணன், பொது பாதையில் ஏன் கோவில் கட்டுகிறார்கள் என கேட்டபோது, 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஜெயபால், செல்வமூர்த்தி, சிவமூர்த்தி, சுந்தரமூர்த்தி, கண்ணன், கருணாமூர்த்தி, கார்த்தி, நந்தகோபால் ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் கண்ணன், நந்தகோபால், கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, ஆகியோர் மீதும், கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபால், செல்வமூர்த்தி, ஜெயமூர்த்தி, சுந்தரமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×