search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "container lorry"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்து.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பெரம்பலூருக்கு சென்று கொண்டிருந்தது. இதை பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது35) என்பவர் ஓட்டி சென்றார்.

    திண்டிவனம் சென்னை புறவழிச்சாலை மரக்காணம் மேம்பாலம் மேல் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் லாரி உடைந்து சாலையில் சிதறியது. விபத்தில் லாரியில் பயணம் செய்த மாற்று டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் வரகூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (38),லோடுமேன்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் (22),மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த செல்வராஜ் (55) அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

    இதுகுறித்து அறிந்த திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.
    • கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தாடே பள்ளியில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. வழக்கமாக முகாம் அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பபடுகின்றன.

    ஆனால் இந்த லாரி சோதனை எதுவும் செய்யப்படவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அங்கு நின்ற லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.

    கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் இதுகுறித்து தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்:-

    ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகத்திற்கு வந்த லாரியில் கட்டு கட்டாக பணம் இருந்திருக்கலாம். அதனை எந்திரங்கள் மூலம் எண்ணி அனுப்பி வைத்துள்ளனர் அல்லது ஆந்திர பிரதேச தலைமை செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகள் கடத்தி வரப்பட்டு இருக்கலாம். ஒருவேளை லாரியில் போதைப்பொருட்கள் கூட இருந்திருக்கலாம் என கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்ற எதிர்க்க ட்சிகளும் இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில்:- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேவையற்ற ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள்.

    பல அரசு துறைகள் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இயங்குகிறது. சம்பந்தப்பட்ட வாகனம் அலுவலகங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்றிருக்கலாம்.

    அவர்கள் சொல்வது போல பணம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் பிடிபட்ட போதை பொருள் நிரப்பப்பட்ட கண்டெய்னர் லோகேஷின் உறவினர்களுக்கு சொந்தமானது என்பது மக்களுக்கே தெரியும் என்றார்.

    • பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
    • போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்

    குனியமுத்தூர்,

    கோவை ஆத்துப்பாலம் முக்கிய சாலைகளை இணைக்க கூடிய பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    தற்போது ஆத்துப்பாலம் பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலையில் கோவை துடியலூரியில் இருந்து தேயிலை தூள்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கேரளாவிற்கு செல்வதற்காக இந்த வழியாக வந்தது.

    கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் வந்த போது, கன்டெய்னர் லாரி திடீரென வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டது. லாரி டிரைவர் எவ்வள வோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் அதன்பின்னால் வந்த வாகனங்கள் அனை த்தும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    ஆத்துப்பாலம் பகுதி முக்கிய சாலைகளை இணைக்க கூடிய சந்திப்பு என்பதால் பொள்ளாச்சி நோக்கி செல்லும் சாலை, பாலக்காடு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இதற்கிடையே அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. லாரி சிக்கி கொண்டதால் வாகனங்கள் செல்ல முடியாதபடி நின்றிருந்தன. உடனடியாக மக்களை விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர்படுத்தி, ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர்.

    இதற்கிடையே லாரி சிக்கிய தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட னர். தொடர்ந்து மேம்பாலத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியும் நடந்தது. வெகு நேரத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு அங்கிருந்து சென்றது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலை லாரி ஒன்று பாலத்திற்கு அடியில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த பகுதி முக்கிய சந்திப்பாக இருப்ப தால் எப்போதுமே போக்கு வரத்து அதிகமாக இருக்கும். எனவே இங்கு நடைபெறும் மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கரடிவாவி பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    பல்லடம்

    கோவை மாவட்டம் சூலூர் செங்கதுறையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் மொபட் வாகனத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிவாவி பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி மொபட்டுடன் மாரிமுத்து ரோட்டில் விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மகன் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் செய்த கண்டெய்னர் லாரி குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 259 தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
    • லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன.

    சேலம் :

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்-ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் அர்ச்சிதாவின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அர்ச்சிதாவின் தாய் மாமனான அருண்பிரசாத் மேச்சேரி அருகே உள்ள மூர்த்திப்பட்டியில் இருந்து சீர்வரிசைகளை கன்டெய்னர் லாரியில் ஊர்வலமாக கொண்டு வந்தார்.

    லாரியில் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம் உள்பட பல்வேறு சீர்வரிசைகளை 259 தட்டுகளில் வைத்து லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன. அதிலும் சீர்வரிசைகளை எடுத்து ஊர்வலமாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சுமார் 2½ மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். இந்த ஊர்வலத்தின் போது செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. மேலும் 19 கார்கள், 75 மோட்டார் சைக்கிள்களில் குஞ்சாண்டியூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்து சீர்வரிசைகளை வழங்கினார்.

    தாய் மாமன் அருண்பிரசாத்தின் செயல்பாட்டை சதாசிவம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அடுத்த மனோரா சுற்றுலா தலத்திற்கு பட்டுக்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 22) மற்றும் அவரது நண்பர் பாப்பாநாடு ஆம்லாபட்டு பகுதியை சேர்ந்த ஹரிஷ் (21) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம டைந்த ஹரிஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூ ரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டம் பவானி நெடுஞ் சாலையை அகலப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.

    மேட்டூர்:

    தர்மபுரி மாவட்டம் தொப்பூர் - ஈரோடு மாவட்டம் பவானி நெடுஞ் சாலையை அகலப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் உள்ள சிறிய பாலங்கள், கல்வெட்டு கள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி, சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலைய 4 ரோடு அருகே உள்ள கல்வெட்டை அகலப்படுத்தும் பணிக்காக சாலையை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேட்டூர் போலீசார், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கிரேன் மூலம் கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    • திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து.
    • போக்குவரத்து போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை.

    சென்னை திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில் தினந்தோறும் துறைமுகத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு மீஞ்சூரில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கன்டெனர் லாரி ஒன்று சென்றபோது, திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள மஸ்தான் கோவில் அருகே நிலைத்தடுமாறி சாலைக்கு நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டிரைவர் செந்தில்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான லாரியின் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    • இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 9 வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது.
    • இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

    தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 9 வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    கோவை ஆத்துப்பாலம் அருகே தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து பொதுமக்கள் லாரியை சிறைப்பிடித்தனர். #ContainerLorry
    கோவை ஆத்துப்பாலம் அருகே சாலையில் தாறுமாறாக கண்டெய்னர் லாரி சென்றது.  அப்போது லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டதால் பொதுமக்கள் அதிகமாக அந்த இடத்தில் கூடினர்.

    அப்போது லாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைக்க முற்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையின்ர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை களைந்து செல்லுமாறு அறிவித்தனர்.  

    பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் வந்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசரணை செய்து வருகின்றனர்.  அப்போது லாரியின் ஓட்டுனர் லாரியில் டீ தூள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையல் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்திலேயே பூட்டை திறக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இங்கு இதனை திறப்பது சட்டப்பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்த அதிகாரிகள் லாரியை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் பொது மக்கள் லாரியை சூழ்ந்து கொண்டு அவ்விடம் விட்டு செல்ல மறுத்துவரும் நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஓசூர் அருகே குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக பகுதியான அத்திப்பள்ளியில், டி.வி.எஸ். கிராஸ் பகுதியில் சாலையோரத்தில் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது வேகமாக மோதியது. 

    இதில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மொகிந்தர் பத்ரா(28) மற்றும் விவேக்குமார்(50) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த அடிபட்டு, சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள்.
    நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தையை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள புதுசத்தரம் பகுதி வழியாக மினி கண்டெய்னர் லாரியில் எரி சாராயம் கடத்தி செல்வதாக நாமக்கல் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான போலீசார், புதுசத்திரம் பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது எரிசாராயம் கடத்தி வந்த மினி கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    கண்டெய்னருக்குள் 550 கேனில் 19 ஆயிரத்து 250 லிட்டர் எரி சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாராயம் அரியானா மாநிலத்தில் இருந்து கடத்தி எர்ணாகுளத்துக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 44) மற்றும் மாற்று டிரைவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சிவைய்யா (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 2 டிரைவர்களை படத்தில் காணலாம்

    பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயத்தை சேலம் சரக மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் பார்வையிட்டு, டிரைவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டினர். #tamilnews
    ×