search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conversion"

    • உள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன்
    • லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத்தை சுட்டிக்காட்டி பெண்ணின் சாட்சியையும் மீறி இளைஞருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரைலியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 வயது இந்து பெண்ணை காதலித்த திருணம் செய்த நபர் முஸ்லீம் என்று பின்னரே தெரியவந்தது என்றும் அவர் ஏமாற்றப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையில் தோன்றிய அந்த பெண் புகாரில் கூறப்பட்டது உண்மைதான் என்று கடந்த ஜூலை 31 ஆம் தேதி சாட்சி சொல்லியிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையிலிருந்த நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றிய அந்த பெண், தஉள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன் பிறழ் சாட்சியம் வழங்கியுள்ளார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி ரவிக்குமார் திவாகர் லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி ரவிக்குமார் கடந்த 2022 இல் ஞானவாபி மசூதியில் இந்து கோவில் இருபதுகுறித்து ஆய்வு நடந்த தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி வலியுறுத்தியதால் தற்கொலை செய்துள்ளார் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    • பள்ளி நிர்வாகி சகாயமேரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

    2022 தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்

    கட்டாய மதமாற்ற முயற்சியே தற்கொலைக்கு காரணம் என்பதால் பள்ளி நிர்வாகிகளை கைது செய்து பள்ளியை மூட வேண்டும் என பாஜக போராட்டம் நடத்தியது.

    மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் பள்ளி நிர்வாகி சகாயமேரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். மாணவி லாவண்யாவின் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில், இந்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக சகாயமேரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவில், "மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று பதிலளித்த சிபிஐ, வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்கு படிக்கும் லாவண்யாவை பிற வேலைகளை செய்ய அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது.

    மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. எனவே குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கூடாது" என தெரிவிப்பு தெரிவித்தது.

    இறந்துபோன மாணவி தரப்பு வாதத்திற்காக வழக்கை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

    • காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இஸ்லாமியர் ஒருவரை சோனாக்ஷி திருமணம் செய்துள்ளதை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

    மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

    ஆனால், இஸ்லாமியர் ஒருவரை சோனாக்ஷி திருமணம் செய்துள்ளதை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த திருமண புகைப்படங்களில் பலரும் மோசமாக கமெண்ட் செய்து வந்தனர். இதனால் அந்த பதிவில் யாரும் கமெண்ட் செய்யமுடியாதபடியும் கமெண்ட்களை படிக்க முடியாத படியும் மாற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "7 வருட காதலுக்கு பின்பு ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அன்பை எதிர்பார்த்தனர். ஆனால் தங்கள் மீது வீசப்பட்ட வெறுப்பை தவிர்க்க பதிவின் கமெண்ட் பகுதியினை தடை செய்துள்ளனர். உங்கள் இருவரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

    மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குபிகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

     

    காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

     

    இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். தபாங், ரவுடி ராதோர் ஆகிய படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீரமந்தி வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது.
    • அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை இரு பாதைகளும் ஒருவழிப்பாதைகளாக மாவட்ட நிர்வாகம் சார்பாக மாற்றியமைக்கப்பட்டது,

    கோவை-மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் வாகனங்கள் காட்டேரி-குன்னூர் வழியாகவும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம்-கோவை ஈரோடு என செல்லும் வாகனங்கள் ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் வாகனங்களை கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது,

    மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடைந்த நிலையில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் கீழ்நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக உள்ளூர் வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்காமல் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசி களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • பிரியங்கா நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட இந்து மதம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
    • எதிர் தரப்பினரிடம் முறையாக அனுமதி பெற்று ஆலயம் நடத்த அறிவுறுத்தினர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் தெற்குதாலுகாவிற்குட்பட்ட வீரபாண்டி 54வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரியங்கா நகரில் மத மாற்றத்தை தடை செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பிரியங்கா நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட இந்து மதம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒரு வீட்டில் மதம் மாற்றம் நடைபெறுவதை அறிந்து வீரபாண்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தோம். அதற்கு அவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். எதிர் தரப்பினரிடம் முறையாக அனுமதி பெற்று ஆலயம் நடத்த அறிவுறுத்தினர். காவல் துறையிடம் மனு கொடுத்த அன்று இரவே எங்கள் பகுதியில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி எச்சரிக்கை செய்தனர். இதனால் எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • பரமத்தி வட்டாரத்தில் கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
    • குறைந்த பட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர், நல்லூர் மற்றும் இருட்டணை ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பு வரை ஒரு தொகுப்பாகவும் 15-35 ஏக்கர் நிலப்பரப்பு வரை 2-வது தொகுப்பாகவும் ஏற்படுத்தலாம். மேலும் இத்திட்டத்திற்கு தேவையான தகுதிகள் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்தாக இருக்க வேண்டும். தரிசு நில தொகுப்பின் பரப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

    குறைந்த பட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும். பயனாளிகள் அக்கிராம பஞ்சாயத்துகளிளோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ குடியிருப்போராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×