என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cooking gas safety"
- பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் சின்னராசு வரவேற்றார்.
- கியாசை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
உடுமலை:
உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் விநியோகஸ்தர் செல்வி கியாஸ் ஏஜென்சீஸ் சார்பாக சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார். செல்வி கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் சின்னராசு வரவேற்றார்.
எரிவாயுவை கவனமாக கையாளுவது, எரிவாயு பாதுகாப்பு சிக்கனம் குறித்து செல்வி கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் அய்யப்பன் விளக்கி பேசினார். தொடர்ந்து கியாசை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. சமையல் எரிவாயு குறித்த கேள்விகளுக்கு சரியான முறையில் விடை அளித்த மாணவிகளுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேல் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். இந்த முகாமானது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர்(எல்.பி.ஜி.) பிரகாஷ் மீனா மற்றும் துணை மேலாளர் (எல்.பி.ஜி) அபிஜித் பி. விஜய் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது.