search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cookking Recipes"

    • மணத்தக்காளி தண்ணிச்சாறு அருமையான சுவை கொண்டது.
    • எளிமையாக 10 நிமிடங்களில் செய்யக் கூடியது.

    தஞ்சாவூர் பக்கத்தில் மிகவும் விரும்பி செய்யப்படும் இந்த தண்ணிச்சாறு அருமையான சுவை கொண்டது. மிகவும் எளிமையாக 10 நிமிடங்களில் செய்யக் கூடியது. வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றை நீக்க வல்லது.

    தேவையான பொருட்கள்:

    மணத்தக்காளி கீரை - 1 கட்டு.

    சின்ன வெங்காயம் - 15

    வரமிளகாய் - 3

    சீரகம் - 1 ஸ்பூன்

    வெந்தயம் - 1/2 ஸ்பூன்

    தேங்காய்ப் பால் - 1 கப்

    மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மணித்தக்காளி கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பாதியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அரை மூடிதேங்காயை நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், வெட்டி வைத்துள்ள கீரை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிய பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கலந்து விட்டபிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும். கொதிக்க விடக்கூடாது. இறுதியாக தேங்காய் பால் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு ரெடி.

     வயிற்றில் புண் இருப்பவர்கள், அல்சர் பிரச்சினை இருப்பவர்களுக்கு, கர்பப்பை பிரச்சினை, குழந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு அல்லது அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.

    ×