என் மலர்
நீங்கள் தேடியது "Corona"
- பாஜக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற சிந்தியா பாதியில் வெளியேறினார்.
- காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
போபால்:
விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக முக்கிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த சிந்தியா, காய்ச்சல் காரணமாக பாதியிலேயே அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், தாம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தமக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பில் இருந்து வந்த அனைவரும் அருகிலுள்ள சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் மந்திரி ஜோதிராதித்யா தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய பிரதேச பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இன்று மாலை 4:30 மணி விமானத்தில் டெல்லிக்கு திரும்ப அவர் திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
- ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
- கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கொரோனா, டெங்கு குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜான் ரவி, கவுன்சிலர்கள் சாலமோன்ராஜா, பழனி சங்கர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளநிலை உதவியாளர் முகைதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக்குழுவினர் ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு கொரோனா, டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் செல்வின்துரை, ஆனஷ்ட் ராஜ் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- சுகாதார செவிலியர் காந்திமதி மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கூர் வடக்கு மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பேரணி நடைபெற்றது.
மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சாவூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் யுஎஸ்எய்ட் மொமன்டம் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையேற்று நடத்தினார். ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலர் மகேஷ் குமார், மருத்துவர் புவனி, பகுதி சுகாதார செவிலியர் காந்திமதி மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாத்தி தொண்டு நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், நித்தேஷ், ரேவதி அன்னலட்சுமி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியானது மதுக்கூர் வடக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி மெயின் ரோடு வழியாக முக்கிய வீதிகள் வழியாக பெரமையா கோயில் வரை சென்று திரும்ப பள்ளியை வந்து அடைந்தது.
- கொரோனாவுடன் தொற்றால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளின் இறப்பு அதிகரித்து வருவதாக தகவல்.
- கிராமப்புறங்களில் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்:
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவிதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பதிவான இறப்புகளுடன் அந்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,237 ஆக உயர்ந்தது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு, இதய நோய் பாதிப்பு உள்பட பிற நோயாளிகளின் இறப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இறப்புகளை, சீன சுகாதாரத்துறை, கொரோனா இறப்பு கணக்கில் சேரப்பதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால், அடுத்த மாதம் முதல் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஜனவரி மாதம் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட பயணங்களை அந்நாட்டு மக்கள் மேற்கொள்வார்கள் என்பதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊழியர்களின் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள் இயக்கி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்.
- ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும்.
இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 65 கோடியே 85 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனா, தென்கொரியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், ரஷியா நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகளை மரபணு ஆய்வகங்களுக்கு தினமும் அனுப்ப வேண்டும் என்றும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் போடப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை இன்று 220 கோடி என்ற அளவை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
- ராகுல்காந்தியும், பாதயாத்திரையில் அவருடன் செல்பவர்களும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
- ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.
சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீரென்று வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து மாநிலங்களை உஷார்படுத்தி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், "கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். புதிதாக தோன்றுகிற கொரோனா வைரஸ் திரிபுகளை கண்டறிய வேண்டும். கொரோனா தொற்று இருப்பவர்களின் மாதிரிகளை சேகரித்து மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு உட்படுத்துவதை முடுக்கிவிட வேண்டும்.
உலக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் திரிபுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மத்திய அரசு திடீர் நிபந்தனை விதித்துள்ளது.
ராகுல்காந்தி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையில் அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகிறார்கள். இதனால் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்று கருதி மத்திய அரசு ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியி1ருப்பதாவது:-
ராகுல்காந்தியும், பாதயாத்திரையில் அவருடன் செல்பவர்களும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டவர்கள் மட்டுமே பாதயாத்திரையில் பங்கேற்க வேண்டும். பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் முன்பும், கலந்து கொண்ட பின்பும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேச நலனை கருத்தில் கொண்டு ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.
- கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
- தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
உலகளவில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.
- கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இததொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
அப்போது, தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளில் மாநிலங்கள் கவனம் செலுத்த அறிவுரை
- முக கவசம் அணிவது மற்றும் கைகளை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்.
சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது:
உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும். உலகம் முழுவதும் தினமும் சராசரியாக 5.87 லட்சம் வரை கொரோனா பதிவாகி உள்ள நிலையில், இந்தியாவில் சராசரியாக தினசரி 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்து வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவச பயன்பாடு, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பது, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அனைத்து பரிசோதனைகளையும் அதிகரிக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளிடம் இரண்டு சதவீதம் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
- தொற்று எச்சரிக்கையால், பார்வையாளர்கள் அனைவருக்கும் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியால் நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹாலை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் அதிக அளவில் வருகின்றனர். அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, தொற்று நிலைமையை மனதில் வைத்து, சுற்றுலா பயணிகள் வருகைக்கு முன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் தகவல் அதிகாரி அனில் சத்சங்கி கூறுகையில், "தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது. தொற்று எச்சரிக்கையால், பார்வையாளர்கள் அனைவருக்கும் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பட்டிருந்தார்.
- சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- பிஎப் 7 உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. இந்தியாவிலும், அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விமான நிலையங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் நான்கு விமான நிலையங்கள் உள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாளை முதல் பரிசோதனைகள் தொடங்க உள்ள நிலையில், விமான பயனிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் பகுப்பாய்வுக்கு
உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎப் 7 உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
புதுடெல்லி:
வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து இந்தியாவில் இது தொடர்பாக முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. வெளிநாட்டு விமான பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உருமாற்றம் பெற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிப்பதற்கு இந்த பரிசோதனை பயன்படும்.
சீனாவில் பிஎப் 7 கொரோனா அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் தற்போது 10 வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பதும், மேலும் பிஎப் 7 இருப்பது கண்டறியவும் மரபணு ஆய்வு உதவும்.
மேலும் மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர பொது இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.