search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corporation Vehicle"

    • கடலூரில் பேனரை அகற்றியதால் பரபரப்பு மாநகராட்சி வாகனத்தை அ.தி.மு.க.வினர் சிறைபிடித்தனர்.
    • கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கட்சியினர், அமைப்புனர்கள் பேனர் வைத்துள்ளனர்.

    கடலூர்:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க.வினர் தேர்ந்தெடுத்தனர். இதனை யொட்டி கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மேலும் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க வினர் ஆங்காங்கே எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த பேனர்கள் வைக்கப்பட்டன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே இன்று காலை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனரை அகற்றி மாநகராட்சி வாகனங்களில் கொண்டு சென்றனர்.

    தகவல் அறிந்த மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், கெமிக்கல் மாதவன், நிர்வாகிகள் ஏழுமலை, முத்து, செந்தில்குமார், நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அண்ணாப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த மாநகராட்சி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அ.தி.மு.க. வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அ.தி.மு.க.வினர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் பேனர்கள் வைக்க கூடாது. அதனை மீறி வைத்ததால் பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பேனர் மட்டும் அகற்ற வேண்டும் என தனிப்பட்ட முறையில் யாரேனும் உத்தரவு பிற்படுத்த உள்ளார்களா? மேலும் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கட்சியினர், அமைப்புனர்கள் பேனர் வைத்துள்ளனர்.

    அதனை அகற்றாமல் அதிமுக பேனர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவது யார் தூண்டுதலின் பேரில் நடக்கிறது. மேலும் எங்கள் கட்சி பேனர் மற்றும் அகற்றாமல் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பேனர்களையும் நாங்களே அகற்றி தங்களிடம் ஒப்படைக்கிறோம் என தெரிவித்தனர். அப்போது போலீசார் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    ×