என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cotton Price Forecast"
- சீனாவும்- இந்தியாவும் இணைந்து உற்பத்தியில் பாதிக்கு மேல் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சந்தை ஆலோசனை படி விதைப்பு முடிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் :
சர்வதேச பருத்தி ஆலோசனை குழு அறிவிப்பின்படி சர்வதேச அளவில் பருத்தி நுகர்வின் அளவு 23 மில்லியன் டன்களாகும். அமெரிக்கா வேளாண் துறையின் அறிக்கையின்படி 2023-24 ம் ஆண்டில் உலக பருத்தி உற்பத்தி 24.9 மில்லியன் டன்களாக இருக்குமெனவும், இதில் சீனாவும்- இந்தியாவும் இணைந்து உற்பத்தியில் பாதிக்கு மேல் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி காரணமாக இந்தியாவில் இறக்குமதி 10 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் குறைவாகும். இந்தியா பருத்தியை வங்கதேசம், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்திய பருத்தி கழகத்தின் தகவல்படி இந்தியாவில் பருத்தி உற்பத்தி 2020 -21ம் ஆண்டில் 352 லட்சம் பொதிகளிலிருந்து, 2021-22 ஆண்டு பருத்தி பருவத்தில், (அக்டோபர் - செப்டம்பர்) 315 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. தமிழகத்தில் பருத்தி முக்கியமாக மாசிப்பட்டம், ஆடிப்பட்டம், கார்த்திகைபட்டம் ஆகிய பருவங்களில் விதைக்கப்படுகிறது.
தற்போது ஆடிப்பட்டம் முடியும் தருவாயில் மாசிப்பட்டம் விதைப்பு துவங்கியுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் 1.48 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 3.6 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் பரப்பில் 7. 5 சதவீதமும், உற்பத்தியில் 6 சதவீதமும் அதிகமாகும்.
விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 26 ஆண்டுகளாக வேளாண் பல்கலை விலை முன்னறிவிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தியின் விலை மற்றும் சந்தை நிலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் படி, பருத்தியின் சராசரி பண்ணை விலை மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு 7000 - 7500 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை படி விதைப்பு முடிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு ஏற்றுமதி சந்தை தகவல் மையம்- 0422-2431405/நீர் நுட்ப மையம்- 0422- 6611278/ பருத்தி துறை- 0422-2456297 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்