search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cotton seed milk"

    சுலபமாக செய்யக்கூடிய மிகவும் ருசியான பருத்தி பால் உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). இன்று இந்த பருத்தி பாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பருத்தி விதை - அரை கப்
    பச்சரிசி - கால் கப்
    சுக்குத்தூள் - சிறிதளவு
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    தூளாக்கப்பட்ட வெல்லம் - தேவைக்கு



    செய்முறை:

    பருத்தி விதையை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    அதுபோல் பச்சரிசியையும் ஊறவைக்க வேண்டும்.

    விதைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பருத்தி பால் எடுத்துக்கொள்ளவும்.

    பச்சரிசியையும் மிக்சியில் அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் பருத்தி பால் மற்றும் பச்சரிசி மாவை கொட்டி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் வெல்லத்தை சேர்த்து கிளறிவிடவும்.

    அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ருசிக்கலாம்.

    அருமையான பருத்தி பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×