search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counterfeit market"

    • அரகண்டநல்லூர் அருகே கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மது பான விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் பில்ராம் பட்டு அந்திலி மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங் களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் விற்பனையை தொடங்கும் முன்னரே அருகிலுள்ள தனியார் பார்களில் புதுச்சேரி, கர்நாடக மாநி லத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை நடப்பதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலி வரதன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடிய பின்னரும் கள்ள மார்க்கெட்டில் மது பான விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

    அதனை தொடர்ந்து விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பில்ராம்பட்டு, அந்திலி மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையின் அருகில் உள்ள பார்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் மதுபான கடைகளில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து அதனை சில்லறை விற்பனை செய்து வந்த வடகரை தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த வல்லாளன் மகன் இன்பராஜ் (வயது 38), எஸ்.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் பிரபு (43). அரகண்டநல்லூர் பன்னீர்செல்வம் மகன் வினோத் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×