search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Country List"

    ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அதிகளவிலான பணத்தை தாய் நாட்டிற்கு அனுப்பியவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. #LargestRemittanceCountryList
    நியூயார்க்:

    வெளிநாடுகளில் வேலை செய்யும் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளை சேர்ந்தவர்களில் இந்தியர்கள் தான் அதிகளவிலான பணத்தை தாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ரெமிட்ஸ்கோப் நிறுவனம் கூறியுள்ளது. சுமார் 256 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை கடந்த ஆண்டு மட்டும் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கள் தாய் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் சுமார் 69 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு கடந்த ஆண்டு அனுப்பி வைத்ததன் மூலம் அதிகளவிலான பணத்தை தாயகத்திற்கு அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

    இதற்கு அடுத்ததாக சீனா 64 பில்லியன் அமெரிக்க டாலர், பில்லிப்பைன்ஸ் 33 பில்லியன் அமெரிக்க டாலர் பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் முறையே 10 பில்லியன் அமெரிக்க டாலர், 14 பில்லியன் அமெரிக்க டாலர் என அவரவர் தாய் நாட்டிற்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். மொத்த தொகையான 256 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தில் வளைகுடா நாடுகள் 32 % வட அமெரிக்கா 26% ஐரோப்பா 12 % என மொத்தம் 70 % பணம் இந்த மூன்று பகுதிகளில் இருந்து மட்டும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மூலமாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளுக்கு வந்தடைந்துள்ளது.

    ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கும் 4 பில்லியன் மக்களில் 10 பேரில் ஒருவர் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் நபராகவோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தின் மூலம் உதவி பெரும் நபராகவோ உள்ளார். வெளிநாடுகளில் வேலை செய்பர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணத்தின் பெரும் பகுதி கிராமப்புற பகுதிகளுக்கு செல்கின்றன ரெலிட்ஸ்கோப் நிறுவனம் தெரிவித்துள்ளது. #LargestRemittanceCountryList
    ×