search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coupons"

    • ஆடைகள் வாங்குவதற்காக அதிக பணத்தைச் செலவிடுகிறார்கள்.
    • பணத்தை மிச்சப்படுத்தும் வழிகளை தெரிந்துகொள்வோம்.

    ஆள் பாதி, ஆடை பாதி" என்ற பழமொழி ஆடையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சில தலைமுறைகளுக்கு முன்பு வரை, முக்கியமான பண்டிகைகளின்போது மட்டும் புத்தாடைகளை வாங்குவார்கள். ஆனால் தற்போது அவரவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு எப்போது வேண்டுமானாலும் ஆடைகளை வாங்குகிறார்கள்.

    ஆன்லைன் தளங்களில் கொட்டிக் கிடக்கும் ஆடை வகைகள், பார்ப்பவர்கள் அனைவரையும் உடனே வாங்கிவிடத் தூண்டும். பலரும் ஆடைகள் வாங்குவதற்காக அதிக பணத்தைச் செலவிடுகிறார்கள். அதைத் தவிர்த்து. ஆடைகள் வாங்கும் போது பணத்தை மிச்சப்படுத்தும் வழிகளை இங்கே தெரிந்துகொள்வோம்.

    ஒருசிலர் குறிப்பிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது அணிவதற்காக மட்டுமே விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி இருப்பார்கள். அவற்றை மீண்டும் பயன்படுத்தாமல் அலமாரிகளில் போட்டு வைத்திருப்பார்கள். அத்தகைய ஆடைகளை மறுவிற்பனை செய்வதற்கு சில செயலிகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் நீங்கள் உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் ஆடைகளை விற்பனை செய்யலாம். அந்த பணத்தைக்கொண்டு உங்களுக்கான புதிய ஆடைகள் வாங்கலாம்.

    ஆன்லைன் தளங்களிலும், கடைகளிலும் காட்சி படுத்தப்பட்டு இருக்கும் ஆடைகளால் ஈர்க்கப்பட்டு, அவை எல்லாவற்றையும் வாங்குவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆடைகளின் பட்டியலை முதலில் தயாரிக்கவும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆடைகளை வாங்கவும்.

    ஆடித்தள்ளுபடி மற்றும் வர்த்தக கணக்கு முடிக்கும் சமயங்களில் ஷாப்பிங் செய்வதன் மூலம் குறிப்பிட்ட தள்ளுபடிகளைப் பெற முடியும். அதன்மூலம் குறைந்த விலையில் தரமான ஆடைகளை வாங்கலாம்.

    குறிப்பிட்ட பருவ காலங்களில் சில விற்பனையாளர்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிப்பார்கள். அந்த நாட்களில் அவர்களிடம் ஆடைகளை வாங்குவதன் மூலமும் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

    மொத்த விலையில் துணிகள் விற்கும் கடைகளில், மற்ற இடங்களைவிட குறைந்த விலையில் ஆடைகளை வாங்க முடியும். கூப்பன்கள், லாயல்டி ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் சலுகைகள் அளிக்கும் நிறுவனங்கள் மூலம் ஆடைகள் வாங்கும்போது அதிக அளவு பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    உங்கள் பகுதிக்கு அருகே உள்ள சிறு சிறு கடைகளில் குறைந்த விலையில் தரமான துணிகளை விற்பனை செய்வார்கள். அத்தகைய கடைகளை ஆராய்ந்து ஆடைகளை வாங்குங்கள்.

    சில பிராண்டுகள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். அவற்றை தெரிந்துகொண்டு அதன்மூலம் குறைந்த விலையில் ஆடைகளை வாங்கலாம்.

    ஒரே ஆடையை வெவ்வேறு உடைகளுக்கு மாற்றி அணியக்கூடிய வகையில் ஆடைகளை வாங்கலாம். உதாரணத்துக்கு இரண்டு அல்லது மூன்று குர்திகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் ஒரு பேண்டை தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

    குறிப்பிட்ட விற்பனை நிறுவனங்கள், தாங்களே தயாரிக்கும் ஸ்டோர் பிராண்டுகளை விற்பனை செய்வார்கள். அத்தகைய ஆடைகள் விலை குறைவாகவும், தரமானதாகவும் இருக்கும். அவற்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.

    ×