என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cow calf
நீங்கள் தேடியது "Cow Calf"
- பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
- கடவுளின் ஆசிர்வாததத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே கிராம மக்கள் நினைக்கிறார்கள்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்தர். விவசாயி. இவரது பண்ணையில் 2 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வளர்க்கும் பசுமாட்டில் ஒன்று ஆண் கன்று ஒன்றை ஈன்றது.
அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது. இந்த கன்று குட்டி இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது.
இந்த தகவல் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தெரியவர காட்டு தீ போல் பரவியது.
இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
கடவுளின் ஆசிர்வாததத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே அந்த கிராம மக்கள் நினைக்கிறார்கள்.
மேலும் இந்த பசுவின் உரிமையாளர் பசு மாட்டையும், ஈன்ற அதன் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
×

X