என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cpcl facilities
நீங்கள் தேடியது "cpcl facilities"
பெருந்தலைவர் காமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை மத்திய அரசு நடத்தி வருவதாக திருப்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். #Modiinaugurates #ChennaiMetrostretch #ModiinTiruppur
திருப்பூர்:
திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
பின்னர், கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 பாராளுமன்ற தொகுதிகளின் பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
திருப்பூர் குமரன் உள்ளிட்டோரின் துணிச்சலை பறைசாற்றும் இந்த மண்ணுக்கு தலை வணங்குகிறேன். தொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். திருப்பூர் சின்னமலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது. ‘மீண்டும் நமோ’ என்ற முழக்கத்தை தாங்கிவரும் டி-ஷர்ட் இதே திருப்பூரில் இருந்துதான் தயாராகி நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.
இங்கு பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு நான் இன்று அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
தொழிலாளர்கள் நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ரூ.3000 பென்சனாக வழங்கப்படும். 2 பாதுகாப்பு பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒன்று தமிழகத்தில் அமையவிருக்கின்றன.
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்யவில்லை. துல்லியத்தாக்குதலையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி பேசினர்.
இடைத்தரகர்களை வைத்து காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்து வந்தது. ராணுவத்தை இழிவுபடுத்துவதற்காக, சிறுமைப்படுத்துவதற்காக மிக மோசமான வார்த்தைகளை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து முந்தைய காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்தவில்லை.
சாகார் மாலா திட்டத்தின் மூலம் கடலோர பகுதிகளில் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1.3 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். பாஜக அரசின் நலப்பணிகள் சிலரது மகிழ்ச்சியை சீர்குலைத்துள்ளது. மீனவ மக்களின் நல்வாழ்வுக்கான தனித்துறை உருவாக்கப்படும் என நாங்கள் அறிவித்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கான நேரடி பலன் சென்று சேரவில்லை.
தற்போது நாங்கள் அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 6 ஆயிரம் ரூபாய் வருடாந்திர உதவித்தொகையின் மூலம் வரும் 10 ஆண்டுகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குளில் நேரடியாக சென்று சேரும்.
கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ். இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைது செய்யப்படும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
ஐஸ்கிரீம், சிம்கார்டு ஆகியவற்றுக்கு ‘பேமிலி பேக்கேஜ்’ முறை இருப்பதைப்போல் இப்போது சில தலைவர்கள் ‘பேமிலி பேக்கேஜ்’ முறையில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஜாமின் பெறுவதற்காக கோர்ட் படிகளை ஏறிக்கொண்டிருக்கின்றனர்.
மத்தியில் தற்போது இருக்கும் பாஜக ஆட்சியை போன்று ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என காமராஜர் விரும்பினார். அந்த வகையில் ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பூட்டுப் போட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #Modiinaugurates #ChennaiMetrostretch #ModiinTiruppur
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X