என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » crop insurance compensation
நீங்கள் தேடியது "Crop insurance compensation"
மன்னார்குடி தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற நீண்ட வரிசையில் விவசாயிகள் காத்து இருந்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2020-2021-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்போது பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் பயிர் காப்பீடு செய்துள்ள மன்னார்குடி அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக மன்னார்குடியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று இழப்பீட்டு தொகையை பெற்று செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 150 நபர்கள் இழப்பீடு பெறுவதற்கான டோக்கன்கள் வங்கியில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் பயிர் காப்பீடு இழப்பீட்டை பெறுவதற்காக விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாள் ஒன்றுக்கு 300 டோக்கன் வரை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு தொகை கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மன்னார்குடியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டுமே பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டதால் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனைவருக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க கோரி அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அறந்தாங்கி:
அனைவருக்கும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க கோரி அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் தர்ம தங்கவேல் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அரவிந்தன், அறந்தாங்கி ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திக், அறந்தாங்கி நகரத் தலைவர் வீராச்சாமி, வட்டாரத் தலைவர்கள் நிலையூர் சரவணன், கூடலூர் முத்து, விஸ்வநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ்காந்தி, மாவட்டச் செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் குணசேகரன், முத்து சிவகிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை கல்வி கடனுக்காக வரவு வைப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X