என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Crowd Increase"
- இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
- மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னை:
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பணிகள் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு காலை 10 மணி முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். இன்று இரவு 8 மணி வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பின்னர் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
- கூட்டம் குறைவாக இருந்த கோவை - மன்னார்குடி, கோவை - ராமேஸ்வரம் ரெயில்களிலும் கூட்டம் நிறைந்து வருகிறது.
- ஜூலை இரண்டாவது வாரம் வரை இதே நிலை தொடரும்.
திருப்பூர்:
தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வுகள் நடந்ததால், ரெயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கவில்லை. தற்போது கோடை விடுமுறை நிறைவு பெற உள்ள நிலையில் ரெயில்களில் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. திருப்பூர் வழியாக செல்லும் பெரும்பாலான தொலைதூர ரெயில்களில் முன்பதிவு நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.
இது குறித்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ரெயில்களில் அடுத்த 10 நாட்களுக்கு முன்பதிவில் இடமில்லை. கூட்டம் குறைவாக இருந்த கோவை - மன்னார்குடி, கோவை - ராமேஸ்வரம் ரெயில்களிலும் கூட்டம் நிறைந்து வருகிறது.
பீஹார் ,பாட்னா, ஜார்க்கண்ட் தன்பாத், அசாம் திப்ரூகர் மற்றும் புதுடில்லியில் இருந்து தமிழகம் வரும் ரெயில்களின் முன்பதிவு பெட்டி படுக்கை, இருக்கை நிறைந்து, தொங்கியபடி ரெயில்களில் வடமாநிலத்தினர் பயணிக்கின்றனர். ஜூலை இரண்டாவது வாரம் வரை இதே நிலை தொடரும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்