search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRPF soldiers dead"

    பயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றி ராணுவம் முடிவு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். #PMModi #PulwamaAttack #CRPF

    மும்பை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் நேற்று தெரிவித்தார். பயங்கரவாதிகளை ஒழித்து கட்ட ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றும் தெரிவித்தார். மராட்டிய மாநிலம் யவதாமில் நடந்த பொது நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    இந்திய பிரிவினைக்கு பிறகு ஒரு நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது, திவாலாகி கொண்டு இருக்கும் அந்த நாடு இன்று பயங்கரவாதத்தின் சின்னமாக இருக்கிறது.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டுவது குறித்து ராணுவம் முடிவு செய்யும் பதிலடி கொடுப்பது குறித்து நமது வீரர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு மோடி பேசினார். #PMModi #PulwamaAttack #CRPF

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். #PulwamaAttack #CRPFjawans #Modilaywreath
    புதுடெல்லி:

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் இன்றிரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    டெல்லியில் வைக்கப்பட்டுள்ள வீரர்களின் உடல்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.



    இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின்  இறுதி யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.  #PulwamaAttack #CRPFjawans #Modilaywreath
    ×