search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSputtaraju"

    தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவதாக குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #Kumaraswamy #PMModi #ITRaid
    பெங்களூர்:

    கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

    இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முயாது என்று கூறி இருந்தார். குமாரசாமி இந்த தகவலை பதிவிட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு நேற்று இரவு பல்வேறு இடங்களில் வருமானவரி சோதனை நடத்தினார்கள்.

    இதில் அரசியலில் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவரும் அடங்கும். இதுகுறித்து குமாரசாமி கூறும்போது, பொதுவாக வருமானவரி துறை சோதனை மாநில போலீசார் பாதுகாப்புடன் நடக்கும். ஆனால் வருமானவரி துறையினர் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்புக்கு இன்று அழைத்து சோதனை மேற்கொள்வதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

    விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளை அழைத்து வர 200-க்கும் மேற்பட்ட கார்கள் தயாராக உள்ளன. ஜே.டி.எஸ். கட்சி, காங்கிரசுடன் தொடர்புடையவர்கள் மீது அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனைகள் நடக்கிறது. வருமானவரி துறை அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டால் அதற்காக வருத்தப்படுவார்கள். வருமானவரிதுறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #PMModi #ITRaid
    கர்நாடகாவில் நுண்ணீர் பாசனத்துறை மந்திரி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #JDS #CSPuttaraju
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் பணத்தை கொண்டு செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

    கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பல லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் நுண்ணீர் பாசனத்துறை மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவருமான சிஎஸ் புட்டராஜு வின் வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறையினர் திடீரென சென்று சோதனையில் ஈடுபட்டனர்.



    மேலும் புட்டராஜூவிற்கு பெங்களூரு, மாண்டியா, மற்றும் மைசூர் ஆகிய 3 இடங்களிலும் உள்ள 17 பொதுப்பணித்துறையைச் சார்ந்த ஒப்பந்ததாரர்கள், மற்றும் நுண்ணீர் பாசன துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வீடுகளிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். #ITRaid #JDS #CSPuttaraju
    ×