search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Curriculum implementation"

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான தனிப் பாடத்திட்டதை ஏற்படுத்தியுள்ளது. #HappinessCurriculum #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான தனிப் பாடத்திட்டதை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தீர்மானித்தது.

    இதை தொடர்ந்து இந்த பாடத்திட்டத்துக்கான பாடங்களை உருவாக்குவதில் கல்வியாளர்கள் குழு இறங்கியது. இந்த குழுவின் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட மகிழ்ச்சிக்கான (Happiness Curriculum)
    புதிய பாடத்திட்டத்தை திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா இன்று தொடங்கி வைத்தார்.

    டெல்லி தியாகராஜ் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளையர் ஆட்சிக்காலத்து 150 ஆண்டுகால பழைமைவாய்ந்த பாடத்திட்டத்துக்கு மாற்றாக தற்கால சூழலுக்கு ஏற்ப இந்த புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

    நாட்டுப்பற்று மற்றும் தியானத்துடன் கூடிய பாடங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய பாடத்திட்டம் நாள்தோறும் அனைத்து வகுப்புகளிலும் 45 நிமிடங்கள் நடைபெறும். இதை தொடங்கி வைக்க தலாய் லாமாதான் சிறந்தவர் என நாங்கள் தேர்வு செய்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

    முழுமையான அறிவு, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் வெளியுலகுக்கு சென்று சகோதரத்துவம், ஒருமைப்பாடு, அமைதி ஆகிய அறவழிகளின் மூலம் புதிய சமுதாயத்தை கட்டமைப்பார்கள் என டெல்லி கல்வித்துறை மந்திரி மற்றும் துணை முதல் மந்திரியுமான மணிஷ் சிசோடியா கூறினார். #HappinessCurriculum #Kejriwal
    ×