என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cyclone Mandous"
- அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- குடிநீர் தேவையை சமாளிக்க பூந்தமல்லி அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி இருந்த தண்ணீரும் பெரிதும் உதவியது.
- மாண்டஸ் புயலின்போது கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழை நீர் வெளியேறி கல்குவாரி குட்டையில் சேர்ந்து வருகிறது.
பூந்தமல்லி:
சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு குடிநீர் எரிகளில் தண்ணீர் வற்றியதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
அப்போது குடிநீர் தேவையை சமாளிக்க பூந்தமல்லி அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி இருந்த தண்ணீரும் பெரிதும் உதவியது. கல்குவாரி தண்ணீரை சுத்திகரித்து அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து சென்னை நகரில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைளை அரசு தீவிரப்படுத்தியது. ஏரி, குளங்களில் கூடுதல் தண்ணீரை சேமிக்க தூர்வாரி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பூந்தமல்லி, மாங்காடு பகுதியில் தேங்கும் வெள்ள நீரை சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரியில் தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.
பருவமழை காலங்களில் பூந்தமல்லி நகராட்சி, மலையம்பாக்கம், வரதராஜபுரம், மேப்பூர், நசரத்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் பூவிருந்தமல்லி, மலையம்பாக்கம் ஊராட்சி, மாங்காடு நகராட்சியில் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக மாங்காடு நகராட்சியில் பெரும் பாதிப்பை உண்டாகியது.
இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி, மாங்காடு நகராட்சியில் ஏற்படும் வெள்ள நீரை சிக்கராயபுரம் கல்குவாரியில் சேமிக்கும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டனர். தலைமை செயலாளர் இறையன்பு உட்பட அதிகாரிகளும் ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கையில் கால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது.
பூந்தமல்லியில் இருந்து சிக்கராயபுரம் வரை 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனியாக வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 30 அடி அகலத்தில் கால்வாய்கள் அமைத்தனர். தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக இந்த கால்வாய் வழியாக சென்ற மழைநீர் கல்குவாரி பள்ளத்தில் சென்று சேர்ந்தது. தொடர் மழை காரணமாக இங்குள்ள 3 கல்குவாரி குட்டைகள் முழுவதும் நிரம்பி உள்ளது.
மாண்டஸ் புயலின்போது கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழை நீர் வெளியேறி கல்குவாரி குட்டையில் சேர்ந்து வருகிறது.
சிக்கராயபுரம் கல்குவாரியை பொருத்தவரை சுமார் 1 டி.எம்.சி வரை சேமிக்கும் அளவிற்கு ராட்சத பள்ளங்கள் உள்ளது. தற்போது வரை 3 கல்குவாரி குட்டை கள் நிரம்பி உள்ளதால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த தண்ணீரை கோடைக்காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிக்கராயுபுரம் கல்குவாரி குட்டையில் தண்ணீரை தேக்கும் திட்டம் முழுபலனை கொடுத்து இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். கல்குவாரி குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை முறையாக பராமரித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதேபோல் தண்ணீரை சேமிக்கும் புதிய ஏரிகளை அரசு உருவாக்கி வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 22 மண்டலங்களில், 46 கிராமங்கள் மற்றும் 7 நகரங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.
- 8,215 ஹெக்டேர் விவசாய பயிர்கள், 545.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன.
திருப்பதி:
மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர்வெங்கடரமணரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மண்டல வாரியாக கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கே.வெங்கடரமண ரெட்டி கூறியதாவது:-
திருப்பதி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சுமார் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பயிர் இழப்பு, மாடு, ஆடு இழப்பு, வீடுகள் சேதமடைந்த அனைவருக்கும் அரசு ஆதரவு அளிக்கும்.
மாவட்ட நிர்வாகம், அரசு விதிமுறைகளின்படி பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க கள அளவில் ஆய்வு செய்து வருகிறது.
22 மண்டலங்களில், 46 கிராமங்கள் மற்றும் 7 நகரங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 8,215 ஹெக்டேர் விவசாய பயிர்கள், 545.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன.
3,500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 105 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,416 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 7 கன்று குட்டிகள், 9 செம்மறி ஆடுகள் இறந்துள்ளன. 142.19 கி.மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன.
மின்சாரத்துறைக்கு ரூ.19.78 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து முழுமையான மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
- பாதிக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவான "மாண்டஸ்" புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கல்பாக்கம் அருகே உள்ள கடலோர பகுதிகளான உய்யாலிகுப்பம், புதுபட்டினம்குப்பம் போன்ற பகுதிகளை இன்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மாவட்ட செயலாளர் சுந்தர், மீன்வளத்துறை கமிஷனர் பழனிசாமி மற்றும் அதிகாரிளுடன் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் உய்யாலிகுப்பம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அனைத்து மீனவர்கள் பகுதிகளிலும் கிராமங்ககளை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைப்பது போன்ற திட்டங்கள் இருந்தாலும் நீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு உள்ளது, அது சரியானதும் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். உய்யாலிகுப்பம் பகுதியில் ஆய்வை முடித்துக்கொண்ட அமைச்சர் அங்கிருந்து செய்யூர் வட்டம், கடலூர், சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பம் போன்ற பகுதிகளை ஆய்வு செய்தார்.
- மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரை ஓரத்தில் உள்ள கோயில், தார் சாலைகள், படகுகள் சேதமடைந்தது.
- பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த "மாண்டஸ்" புயலானது மாமல்லபுரம் அருகில் உள்ள நெம்மேலி, தேவநேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம் மீனவர் கிராமங்களை தாக்கியது. இதில் கடற்கரை ஓரத்தில் உள்ள கோயில், தார் சாலைகள், படகுகள் சேதமடைந்தது. சில பகுதிகளில் வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.
இப்பகுதி பாதிப்புகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் தலைவர் கௌதமன், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, சதீஷ்குமார், மோகன்குமார், தேசிங்கு, இ.சி.ஆர் அன்பு, ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது துண்டில் வளைவு அமைகக் வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதல் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதி மீனவர் கிராமம் சேதங்களை ஆய்வு செய்து, கணக்கிட்டு அதன் விபரங்களை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும். இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்கு மதிய உணவு வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.
- மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது.
- நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து.
மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த புயல் மற்றும் மழை வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 25 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. இதேபோல் 21 கால்நடைகள் இறந்து இருக்கிறது.
மேலும் 2,668 கோழி மற்றும் வளர்ப்பு பறவைகள் இறந்துள்ளன. நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
- கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்களும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
திருவள்ளூர்:
மாண்டஸ் புயல் காரணமாக திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இன்று விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்களும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அமராவதி அணையில் இருந்து 1,282 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
- இந்த ஆண்டில் 5-வது முறையாக அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
உடுமலை:
மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்தநிலையில் புயல் கரையை கடந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ஆறுகள் மூலம் நீர் பெறுகிற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை உள்ளது.
90 அடிக்கு நீர் தேங்கும் வகையில் 4.04 டி.எம்.சி., கொள்ளளவுள்ள இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை, கொடைக்கானல், மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நீர்வரத்தை நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அணைக்கு திடீரென 1000 கனஅடியை கடந்து நீர்வரத்து இருந்தது. இதனையடுத்து அணையில் ஏற்கனவே 89.5 அடிக்கு நீர்தேக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு கருதி வரத்து நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 89 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,282 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
அணையின் மொத்த கொள்ளளவான 4.04 டி.எம்.சி.யில் தற்போது 3.99 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது. அணை முழு கொள்ளளவில் தற்போது உள்ளது.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் வரும் நீர் முழுமையாக உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த ஆண்டில் 5-வது முறையாக அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 9-ந்தேதி இரவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் மர அறுவை எந்திரங்களை பயன்படுத்தி அகற்ற தொடங்கினார்கள்.
- 644½ டன் எடையுள்ள மரக்கழிவுகள் 100 டிப்பர் லாரிகளின் மூலம் 291 நடைகளாக மாநகராட்சியின் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சென்னை:
'மாண்டஸ்' புயலினால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும், ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன. அதன்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில் விழுந்தன.
இந்த மரக்கிளைகள் அனைத்தையும் மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 9-ந்தேதி இரவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் மர அறுவை எந்திரங்களை பயன்படுத்தி அகற்ற தொடங்கினார்கள்.
அந்தவகையில் 644½ டன் எடையுள்ள மரக்கழிவுகள் 100 டிப்பர் லாரிகளின் மூலம் 291 நடைகளாக மாநகராட்சியின் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் ஓய்ந்த பின்னரும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் விட்டு, விட்டு மழை கொட்டியது.
பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
இதில் 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.
இதே போல் 139 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 41 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது.
- அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது.
ஆலந்தூர்:
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதே போல் நேற்று 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 2 மணி நேரம் ஓடு பாதையும் மூடப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மலேசியா, மும்பை, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன.
இந்த நிலையில் தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது.
இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "சென்னை விமான நிலையத்தில் விமான சேவை வழக்கம் போல் உள்ளது. கடினமான நேரத்தில் உறுதுணையாக இருந்த அரசு மற்றும் விமான நிலையங்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நிலைமையை புரிந்து ஒத்துழைப்பு அளித்த அனைத்து பயணிகளுக்கும் நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்