search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damaged farmers land"

    கூடலூர் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வன விலங்குகள் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக வெட்டுக்காடு, எல்கரடு, பலியங்குடி ஆகிய பகுதிகளில் பயிர்கள், வாழை, இலவ மரம், மாமரம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் அகழிகள் அமைக்க வேண்டும் அல்லது சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுருளி ஆறு முதல் பலியங்குடி வரை அகழிகள் அமைக்கப்பட்டது. மேலும் எல்கரடு பகுதியிலும் அகழி அமைக்கப்பட்டது. தற்போது அவை மழையால் சேதமடைந்து மூடப்பட்ட நிலையில் உள்ளது.

    சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் கேரளாவில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் மீண்டும் இடம் பெயர்ந்து கூடலூர் விளை நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. பலியங்குடி, மாவடி, வட்டதொட்டி ஆகிய இடங்களில் தொடர்ந்து யானை புகுந்து வருவதால் வனத்துறையினர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×