என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dance bar"
- நடன மது பார்களை கண்காணிக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
- புதுவை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கவும், வருவாயை பெருக்கும் நோக்கில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
இந்த ரெஸ்டோ பார்கள் அனுமதி நேரத்தை தாண்டி நள்ளிரவிலும் செயல்படுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடன மது பார்களை கண்காணிக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
அதன்பேரில் கலால் மற்றும் போலீசார் மது பார்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு ரெஸ்டோ பாரில் பெரியக்கடை போலீசார் சோதனை செய்தனர். அந்த பார் அனுமதியின்றி செயல்படுவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகராஜ், புதுவை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆணையர் உத்தரவின் பேரில், வருவாய் அதிகாரி சாம்பசிவம் தலை மையில் நகராட்சி ஊழியர்கள் பெருமாள் கோவில் வீதியில் இயங்கி வந்த ரெஸ்டோ பாரை பூட்டி 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.
- இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
- இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் நூற்றுக்கணக்கான மதுபார்கள் ஏற்கனவே இயங்கி வருகிறது.
தற்போது ரெஸ்டோபார் எனப்படும் நடன அரங்கத்துடன் கூடிய மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இந்த மதுபார்கள் நகர், புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே புதிது, புதிதாக முளைத்து வருகிறது. குடியிருப்புகள், கோவில், பள்ளி அருகே ரெஸ்டோ பார் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் அரசின் வருவாயை பெருக்கும் வகையில் ரெஸ்டோ பாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
வார இறுதியில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஒரு தரப்பினர் ரெஸ்டோ பாருக்காகவே வருகை தருகின்றனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு, நடனமாடுவதை விரும்புகின்றனர்.
அதோடு நள்ளிரவு வரை ரெஸ்டோ பார் திறந்து செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நள்ளிரவுக்கு மேல் மதுஅருந்தி கொண்டாடி விட்டு, நள்ளிரவு, அதி காலைக்கு மேல்தான் விடுதிகளுக்கு திரும்புகின்றனர்.
புதுவையில் இருசக்கர வாகனங்களும் அதிகளவு வாடகைக்கு விடப்படுவதால், இதுபோன்ற ரெஸ்டோ பார் செல்பவர்கள், கார்கள், மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் செல்கின்றனர்.
அப்போது ஒரு சில இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஏற்கனவே புதுவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் புதுவை இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
சமீபகாலமாக ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவத்தில்தான் லப்போர்த் வீதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயரை தாக்க முயன்றபோது பலியாகியுள்ளார். இது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மக்களுக்கு பிரெஞ்சு காலத்தில் இருந்தே மது அருந்தும் பழக்கம், பார்ட்டி கொண்டாடும் பழக்கம் உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவோ, பொது இடங்களில் அருவருக்கத்தக்க வகையிலோ நடப்பதோ கிடையாது.
ஆனால் புதிய ரெஸ்டோ பார் கலாச்சாரம் சாலையின் நடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடுவது, பொது மக்களை அச்சுறுத்துவது போன்ற சம்பவங்களை அதிகரிக்க செய்துள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. குரல் கொடுத்துள்ளது. ரெஸ்டோ பார் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் புதுவை அரசுக்கு வருவாயா? வருங்காலமா? என்ற நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்